Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அம்மனுக்கு அரோகரா...

அம்மனுக்கு அரோகரா...
சோதியா

 

'கற்பூர நாயகியே

கனகவல்லி...'

ஆங்காங்கே சுருதி பிசகினாலும்

இசையும் எச்சிலும்

நாதஸ்வர

வாய்வழியே வழிகிறது.

உற்சாகபானம் உள்ளிறங்கினாலும்

தாளம் தவறவில்லை தவில்

 

மஞ்சள் பூசி

மாலை போர்த்தி

ஆயிரம் கண்ணுடையாள்

அகிலாண்ட நாயகி

அருள்பாலிக்க

ஆரோகணித்திருக்கிறாள்!

 

கர்ப்பூரம் விற்கும் சிறார்கள்

கடலைக்கார கிழவிகள்

விழியெறியும் விடலையர்

பாதணி பாதுகாவலர்கள்

குளிர்களி வியாபாரிகள்.....

அவரவர்க்கு அவரவர் வேலை

 

ஆனாலும்....

கொஞ்சமும் நகரவில்லை மஞ்சம்

'இலுப்பைக்காட்டு பேச்சி

இம்மியும் நகராள்' -

மடித்துக் கட்டிய வேட்டியோடு

பக்தர்கள் சிலர்

மல்லுக்கு நிற்கிறார்கள்.

 

கனடா கந்தவனத்தாரின்

பத்தாம் திருவிழா

கோபுர திருப்பணிக்கு

பத்துலட்சம் வழங்கிய

பாரிஸ் பரமேஸ்வரனுக்கு

கைமாறியிருக்கிறது.

 

'வடத்திலை தொட்டால்

வழிச்சுத்தின்ன கையிருக்காது'

ஓங்கி ஒலிக்கிறது

பட்டுவேட்டிப் பக்தனொருவன் குரல்!

அரசடியாரும்

ஐயனார் வீதிக்காரரும்

சாதிப் பிரச்சனையை

சாதிக்கிறார்களென்றும்

சலசலப்பிருக்கிறது.

 

அழைக்கப்பட்ட

ஆமிக்காரரின்

சமாதான பேச்சுக்கள் கூட

சாத்தியப்படுவதாய் இல்லை

பக்தருக்காய்

காத்துக் கிடக்கிறாள்

பராசக்தி!

 

முடிவாயிற்று.....

மொனராகல முனசிங்க பாலித

கேகால கேமதாச தரங்க

களுத்துறை கமகே பண்டார

இவர்களோடு இன்னும் பல

சீருடை சிப்பாய்கள்...

கைகளில் வடக்கயிறு!

கண்களால் சிரித்தபடி

கடக்கின்றாள் காளி தெய்யோ!

 

அம்மாளாச்சிக்கு

அரோ...........கரா!

***

10.09.17                                               -

யாவும் கற்பனையல்ல

9/16/2017 12:57:54 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்