Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

முள்வேலி

<p>முள்வேலி</p>
சோதியா

 

பார்வை தொடும் தூரத்தில்

பரந்திருக்கிறது காணி!

பாதையோர தறப்பாளில்

பனியில் குளித்தபடி நாங்கள்

மாமரத்து நிழலில்

பூப்பந்து விளையாடியபடி அவர்கள்

இடையே

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்

முட்கம்பிவேலி நீண்டுகிடக்கிறது.

'இது இராணுவப் பகுதி

உள் நுழையத் தடை’ !

 

யாரை.... யார்....

தடுப்பது?

எது அபகரிப்பு?

எது அத்துமீறல்?

நான்

புரண்டு புழுதியளைந்து

அகரம் வரைந்த முற்றத்துமண்;

சீருடையோடு சின்னவனை புதைத்த

செம்பாட்டுப் பூமி;

செல்லடிக்கு தலை தப்பிய

தென்னைகள் நான்கு;

ஊஞ்சல் கட்டிக் களித்த

கிழட்டு மாமரம்

இவை மட்டுமே அங்கு

எஞ்சிக் கிடக்கின்றன.

ஆனாலும்.....

எனது நிலம் எனக்கு வேண்டும்.

 

எங்களிடம் ஆயுதம் இல்லை

எங்களிடம் வலிமை இல்லை

எங்களிடம் தலைவர்கள் இல்லை

ஆனாலும்

ஆக்கிரமிப்பின் அடையாளம்

அவமானத்தின் வரைகோடு

அந்நியத்தின் பிடிமானம்

முட்கம்பி வேலி

அதை அகற்றியாக வேண்டும்.

 

அருகே....

பத்துவயதுப் பேரன்

பதாதையுடன்,

'எங்களின் நிலம்

எமக்கு வேண்டும்’ !

 

25.01.18                                                  

2/2/2018 2:31:59 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்