Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இறவாத கனவும், பிறவாத நனவும்

<p>இறவாத கனவும், பிறவாத நனவும்</p>
தம்பா

 

விசேட நாட்களில் கொளுத்திய

பட்டாசு பயத்துக்கு

ஊரைவிட்டு ஓடிப்போன காக்காக்கள்

விரத சோற்றை புறம்தள்ளி

விருந்துச் சோற்றை சுவைக்க

வந்து போவது போல

போர்வற்றிய நாள் தொடங்கி

கோடையில் உல்லாசப் பயணம்

வந்து போகும் வேற்றுக்கிரக வாசிகள்.

 

ஆனாலும் கிரகவாசிகள்

பார்களில் வழங்கும் `காக்டெய்ல்´போல்

ஆயிரம் மொழி கலந்து

தமிழும் பேசுகிறார்கள்.

 

அதிரும் மோட்டார் சைக்கிள்

ஊரை எழுப்பி சீமைத்துரையின்

வருகையை சொல்ல

திறந்த மார்பின் வடச்சங்கிலி

பசையின் செழிப்பை பறைசாற்றும்.

 

ஊர் சுருங்கி தெருவானதும்,

தெருவுக்கு தெரு

சாமியில்லா திருவிழாக்கள் களையாடும்.

ஊருக்குள் கொழுத்தஆடுகள் சட்டியேற

சத்தமில்லாது வேள்வி தொடங்கும்.

 

சொந்த பந்தங்கள் வயிறாறி வயிறெரிய

கோவக்காரனையும் சண்டைக்காரனையும்

வில்லங்கத்துக்கு பாசம் காட்டி

சீமைசரக்கில் அமுக்கி முத்தெடுப்பார்கள்.

 

சாமானியனை வசியம் செய்ய

வாசல் தேடி

வெளிநாட்டு சில்லறைகளை விசிறி

மின்னல் போல் தோன்றி மறைவர்.

 

கடற்கரையும் காற்சட்டையும் 

கடைத்தெருவும் கலாட்டாவும்

கள்ளும் சாராயமும்

போதையும் மயக்கமும்

ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும்

முக்காலமும் முகப்புத்தத்தை நிரப்பும்.

 

போரில் அடியோடு அழிந்துபோன

முருக்கை மரத்திற்கு கவலைகால் நட்டு

மீண்டும் விமானம் எற

முருங்கை மரத்து வேதாளம்

ஈழக்கனவை முறுக்கேற்றும்.

8/25/2017 11:47:47 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்