Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பொருளுலகு ஆக்கிரமித்த மூளைகள்!

பொருளுலகு ஆக்கிரமித்த மூளைகள்!
ரூபன் சிவராஜா

 

கரங்கள் ஒடிக்கப்பட்டு

வேர்சாய்ந்த மரங்களின் சாபம்

பூமியில் வறட்சியாய் வெடிக்கிறது

 

கட்டடங்களே எங்கும்

வானளந்து நிற்கின்றன

பொருட்களே எங்கும்

கண்ணில் பட்டுத்தொலைக்கின்றன

 

பார்வைப் பெருவெளிகளில்

பரவிப்பாய்கிறது

தொழில்நுட்பக் காட்டாறு

நுகர்பொருள்களோடு

வாழ்க்கைப்பட்ட மனிதனுக்கு

சொற்களின் தேவை அற்றுவிட்டது

 

பெருவெளிகளை நிரவி

மூடியிருக்கிறது இருளின் கனதி

இருளை ஊடறுக்கும் சக்தியற்று

தலைசாய்ந்து தொங்குகின்றன

நிரைநிரையாய் தெருவிளக்குகள்

 

பொருளுலகின் பெருவிரிப்பில்

ஆக்கிரமிக்கப்பட்ட மூளைகள்

நவீனம் புகுந்த வெற்றுடம்புகள்

திக்கறியாத பயணத்தில் மனிதர்கள்

 

வரவேற்பறை

படுக்கையறை

கழிவறை

எதுவும் மிச்சமில்லை

எங்கும் பொருள்

எதிலும் பொருள்

பொருளே எதுவுமான

உலகு

 

பொருட்களிடை நசுங்கி

மூச்சுத்திணறும் காற்றில் புகுந்து

திக்கின்றி அலைகிறது

எம் பகிர்தலுக்கான மொழி

 

இது போலிகள் போற்றும்

காலாவதியான உலகம்

***

04-04-2018

4/7/2018 12:58:22 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்