Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உயிர்கள்தந்து உருவாக்கிய மேதினவிழா

<p>உயிர்கள்தந்து உருவாக்கிய மேதினவிழா</p>
ந. கிருஷ்ணசிங்கம்

 

காலப்பெருவெளியில் கதிற்றெழுந்த

தொல்நிகழ்வின் நினைவுகளை

மேதினம் என்ற விழாவின் தலைப்பு

வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.

 

1889 ஆம் ஆண்டின்                                                                       

மே முதலாம் நாள்                                                              

தொழிலாளர் ஒன்றிணைந்து கூடித்                                                         

தமக்குப் பன்னிரெண்டு மணிநேரம்                                                   

வேலையைத் தொடரமுடியாது.                                                         

எட்டுமணி நேரம் மட்டுமே இனி

வேலைசெய்வோம் என்பதைத்                                              

திண்ணமாகத் தெரிவித்து,

 

அந்நாளில்.. அமெரிக்காவில்

சிக்காக்கோ நகரில்

தொழிலாளர் வர்க்கத்தினர்                                                 

தொழில்மறுப்புச் செய்ததும்,

அமெரிக்க முதலாளித்துவ மூர்க்கம்

அரச வன்முறையை ஏவி,

அவர்களை அடித்து நொருக்கியதும்,

அனேகர் அங்கயீனராகியதும்,

அவர்களில் ஆறுபேர்கள் ஆவிதுறந்ததுவும்,

மீதுளோர் அந்த ஒடுக்குமுறைக்கு

எதிராகக் கொதித்தெழுந்து..

 

அன்று, அத்தெருவில் தேங்கிக்கிடந்த                                                       

தம் தோழர்களின் குருதியில்..

தங்களின் உடைகளைக்

களைந்து, நனைத்து அதைச்

செங்கொடியாய் உயர்த்தி..

உரிமை முழக்கமிட்ட நிகழ்வால்..

முதல் மேதினம் அவனியிலே

அவதரித்துப் பரிணாமித்ததை

நாம் அறிவோம்.

 

மானிடம் வென்றதென்றும்                                                 

மாண்பு சிறந்ததென்றும் மகிழ்ந்து,                                                         

முழக்கங்களிடும் இன்றைய காலத்திலும்                                                        

கொடிய வறுமையின் பிடியிலே உழலும்                                                       

ஒரு வர்க்கமாகத் தொழிலாளர் வாழ்வதும்                                            

முதலாளித்துவ சக்திகளால் எங்கும்                                     

அவர்கள் பலகோணங்களில்..                                               

கொடுவதைகள் உறுவதும்,                                         

உலகப்பரப்பெங்கும் காணுகின்றோம்.

 

இந்த, ஒடுக்குமுறையின் வடிவமானது                                                   

மென்மேலும் வளர்ந்து, இன்று                                               

சடைத்துக் கிளைகள் பரப்பி,                                      

இனங்களுக்கிடையே பல்வேறு                                        

பிரச்சனைகளைப் பெருக்கிப்                                                        

பேரினங்களின் மூர்க்கத்திற்கும்,                                 

அவ்வினங்களால் மூட்டப்படும்                                        

போர்களுக்கும் உள்ளாகி எங்கும்,                                                                     

சிற்றினங்கள் சிதறுண்டு ஒடுங்கித்                                                                                           

தம் உயிர்களை இழக்கும்படியான                                     

சீற்றக்கனலில் தினமும் சிதைவுறுகின்றன.                                      

 

மதவாத சத்திகளின் உறுதுணையால்                                           

வென்றெழுந்து நாடுகளை ஆளும்                                                       

அரசுகள், சிற்றினங்களின் ஒடுக்கலுக்கு                                             

ஏற்றவாறு தமது படைவலிமையைப்                                           

பிரயோகித்து, எதிர்வாத சக்திகளை                            

நசுக்கி, இனவழிப்பு நடத்துகின்றன.

 

பாட்டாளிவர்க்கத்தினரின் பெருந்தியாக                                     

முன்னெடுப்புகளால் 1890 ஆம் ஆண்டு                                                

நடந்தேறிய மேதினப் பேரணியில்

அவர்கள் பெற்ற வெற்றியினால் மனிதவர்க்கம்

எட்டுமணி நேரவேலை மற்றும், ஓய்வு                                                  

முதலான.. கேட்டவை கிடைக்கப்பெற்று,

பாட்டுடைத் தினமாக இப்பாரில் இன்று                                                       

மேதினம் பாராட்டப்பட்டாலும்,

 

'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்.'

என்ற, இந்தத் தொழில்சார்ந்த எழுச்சி

முழக்கமானது, இன்று உலகில்                                                     

ஒடுக்கப்படும் மக்களின் துயர்சொல்லும்                                                      

தினமாகவும் மாறியுள்ளது. 

 

தம் நாடுகளைவிட்டுப் புலம்பெயர்ந்து,                                         

அந்நியதேசங்களில் வந்தேறிகளாய் வாழும்                                                

இனங்களின் தாயக விடுதலைகருதிய                                        

முழக்கங்களுக்கும், ஊர்வலங்களுக்கும்                                                             

ஏற்றவோர் தினமாகவும்.. இன்று இந்த                                        

மேதினம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது!

5/1/2018 1:22:02 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்