Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எல்லைகள் இல்லாத தேசம்

எல்லைகள் இல்லாத தேசம்
தம்பா

 

அசுரர்களின் உலகம் வினோதமானது.

இங்கு தலைவனைத் தவிர்ந்து

அனைவரும் சிறையினுள் தான்

வாழ்வு என்றாகி விடுகிறது.

 

தேவர்களின் மூச்சுக்காற்றையும் சிறைப்படுத்த

அசுரர்களும் சிறைகூடங்களினுள் 

குடியமர்ந்து கொள்கின்றனர்.

.

அதிகார சுவை என்பது

சிறைவாசம் ஆனாலும்

அனுபவிக்கவே ஆசைகொள்கிறது.

 

சிறையின் அதிகாரமானது

சிம்மாசனத்தின் அதிகாரத்திலும்

தித்திப்பானதாகி விடுகிறது.

 

`அரசின் அதிகாரம் எப்போதும்

சிறைகளில் தான் பாதுகாப்பாக இருக்கிறது ´

எனும் ரகசிய மந்திரத்தை 

அசுரர்கள் காத்து வருகின்றனர்.

 

இங்குதான்

ஆண்டானும் அடிமையும்

அதிகாரங்களை இழந்து  

சமத்துவச் சங்கமம் நிகழ்த்துகின்றனர்.

 

ஆண்டானாவதையும் 

ஆடிமையாவதையும்

நிர்ணயிக்கும் மையமாகி

அதிஸ்ட்டத்தையும், துரதிஸ்ட்டத்தையும்

அணைத்துக் கொள்கிறது.

 

புரட்சிப் பொறி உருவாவதற்கும்

அணைக்கப்படுவதற்கும் தளமாகி 

பல்முகம் காட்டும் பச்சோந்தியாக

பரபரக்கின்றன சிறைசாலைகள்.

 

சிலநேரங்களில் எமனை தொழுது

நாகரிகத்தை நிர்ணகிக்கும் 

பல்கலைக்கழகங்களாகவும் மாறிவிடுகின்றன.

 

தேசம் என்பது

சிறைகளின் எல்லையை

வரையறை செய்வதும்,

தேசியம் என்பது

சிறைகளின் அடர்த்தியில்

பெருமை கொள்வதும் என்றாகிவிடுகிறது.

10/28/2017 12:22:01 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்