Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நல்லிணக்க வலயம்

<p>நல்லிணக்க வலயம்</p>
சோதியா

 

இன்றோடு

எழுபத்தோராவது

நாளாக இருக்கலாம்.

காணாமல் ஆக்கப்பட்ட

உதிரத்து உறவுகளுக்காய்

உத்தரித்துக் கிடக்கிறோம்

வீதி மருங்கில்

குவிக்கப்பட்ட

கற்களுக்கு நிகராக...

 

காட்சிப் பொருளானோம்

நின்று பார்க்கிறார்கள் சிலர்

நிழற்படம் எடுக்கிறார்கள் சிலர்

நேரமின்றி ஓடுகிறார்கள் சிலர்

ஒலி வாங்கிகளும்

ஒளிப்பதிவு கருவிகளும்

களைத்துப் போயிருக்கலாம்

அல்லது வேறு...

தித்திப்பான தீனி கிடைத்திருக்கலாம்

 

நாவிரண்டு ஆண்டுகள் முன்னாய்

விடுதலையின் வேர் அறுந்த

நாட்களில்

காற்றில் குருதிவெடில் கலந்து

நிணம் கசிந்த நகரம்,

நிலை மாறுகால

நீதிப் பொறிமுறையில்

நீர்த்துப்போய் கிடக்கிறது.

வெள்ளை அப்பிய விகாரைகள்

பட்டொளி வீசிப் பறக்கும்

பௌத்த கொடிகள்

வெசாக் பந்தல்கள்

வெளிச்சக் கூடுகள்

அத்தனையும் அழகுதான்

 

தளிரொன்றின்

தாய் முலைக்கான அழுகுரல்

முள்ளந்தண்டு சிதைந்த

முன்னாள் போராளியொருவனின் முனகல்

நிலம் வேண்டும் மாந்தரின்

கோரிக்கை கொட்டொலிகள்

அனைத்தையும் மீறி

பிரித் ஓதும் ஒலியை

காற்று காவிச் சென்று

பெருநகரை நிறைக்கிறது.

 

சித்தார்த்தா!

நின்

சிந்தை குளிர்வதாக!

 

10.05.2017               

5/13/2017 10:27:43 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்