Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

விறைத்த குறிகளில் மதப்பாசிசம்!

<p>விறைத்த குறிகளில் மதப்பாசிசம்!</p>
ரூபன் சிவராஜா

 

கருவறை முடி

பிஞ்சுடலின் தசை திறந்து

சிதைத்திருக்கிறது

பாசிசப் பூமி புத்திரரின்

காமவெறி

 

ஆசிஃபா

நேற்றுவரை அவள்

நாடோடிகளின் செல்ல மகள்

குதூகலித்து

குதிரை மேய்த்துத் திரிந்தவள்

காடு மலை மேடுகளில்

சுதந்திரமாய்

காற்றோடு நடந்தவள்

 

இன்று அவள் என் மகள்

இனி அவள் உலகக் குழந்தை

 

எப்படித் துடித்திருப்பாள்

ஐயோ

மிருகங்கள்கூட அவளை

இப்படிக் குதறியிருக்காது

 

நேற்று நர்பயா

இன்று ஆசிஃபா

விறைத்த குறிகளில்

மதப்பாசிசத்தைக் காவித்திரிகிறது

காவிக்கூட்டம்

 

காமவெறியும்

பெண்ணுடலைக் கிழிக்கிறது

இனவெறியும்

மதவெறியும்

அதைத்தானே செய்கிறது

பெண்ணுடலைச் சிதைத்துப் புசித்துக்

கோரப்பசி தீர்க்கிறது

 

பூட்டிய கோயிலில்

நீ உயிர் துடித்த போது உன் குரல்

எவருக்கும் கேட்கவில்லை

பிரிந்த உன் உயிரிலிருந்து

முனகும் குரலொலி

உலகின் திசையெங்கும்

நீதிகோரி அதிர்கிறது

 

மகளே

உன்போன்ற பிஞ்சுகளையேனும்

காமவெறி காவுகொள்ளாதிருக்க

உன் ஆன்மக்குரல் காவலிருக்கும்

உன் குதிரைகளோடு

நீ உலவித்திரிந்த

காடு மலை மேடுகளில்

4/14/2018 9:45:11 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்