Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா?

<p>தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா?</p>
ஆழ்வாப்பிள்ளை

 

சிரிக்கும் சிலை, பவானி, இணைந்த கைகள், மாடி வீட்டு ஏழை, அன்று சிந்திய ரத்தம் என்று சில படங்கள் எம்.ஜி.ஆர் நடித்து இடையில் நின்று போன திரைப்படங்கள். இதில் பவானி திரைப்படத்திற்கு கதை எழுதி, தயாரிப்பாளராகவும் கண்ணதாசனே இருந்தார். நீண்டகாலத் தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு பானுமதி ஜோடி. பத்து வருடங்களாகியும் படம் முடியவில்லை. அதற்குள் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியுடன் இணந்து நடித்து அடுத்த கதாநாயகி ஜெயலலிதாவுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார். கண்ணதாசனுக்கு இழப்புகள் வராத வண்ணம் பவானி திரைப்படத் தயாரிப்புச் செலவுகளை எல்லாம் எம்.ஜி.ஆர் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

1967இல் பவானி திரைப்படக் கதையை சற்று மாற்றி, இணைந்த கைகள் திரைப்படத்தில் சிலவற்றைச் சேர்த்து உருவானதுதான் அரச கட்டளை. பகுத்தறிவுப் பட்டறையில் இருந்தாலும் படத்திற்குப் பெயர் வைப்பதில் இராசி பார்த்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் வெளிவந்து பெருவெற்றி கண்ட நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு ஏழு எழுத்துக்கள். அரச கட்டளை திரைப்படத்திற்கும் ஏழு எழுத்துக்கள்தான்.

அரச கட்டளை திரைப்படத்தை தனது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணிக்காக எம்.ஜி.ஆர் நடித்துக் கொடுத்திருந்தார். எம்.ஜி.சக்கரபாணியின் இயக்கத்தில் சத்தியராஜா பிலிம்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் அண்ணனின் பிள்ளைகளான எம்.சி.இராமமூர்த்தி, சத்யபாமா இருவரும் தயாரித்திருந்தார்கள்.

படம் எடுக்கும்பொழுது இருந்த கதைக்கும் படத்தை முடிக்கும்பொழுது இருந்த கதைக்கும் நிறையவே வேறுபாடு. பவானி திரைப்படக் கதையின்படி இறுதியில் நாயகன் இளவரசியை மணம் செய்கிறான். அவனது அத்தை மகள் துறவியாகப் போகிறாள். அரச கட்டளை படத்தை எடுத்து முடிக்கும் பொழுது நாயகன் அத்தை மகளை மணக்கிறான். இளவரசி இறந்து போகிறாள் என்று மாற்றி விட்டார்கள். சரோஜாதேவியின் திருமணத்தோடு அவரின் பாத்திரம் படத்தில் குறைக்கப்பட்டு ஜெயலலிதாவிற்கு அதிகமாகச் சேர்த்து விட்டார்கள். அரச கட்டளை படம் எடுக்கும் பொழுது இனி ஜெயலலிதாதான் எம்.ஜி.ஆரின் புது நாயகி என்ற நிலை வந்துவிட்டிருந்தது. நாடோடி மன்னன் திரைப்படத்தில் தன்னுடன் அதிக படங்களில் நடித்த பானுமதியை சாகடித்து எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை திருமணம் செய்து கொள்வார். பானுமதியின் அன்றைய நிலைதான் அரச கட்டளையில் சரோஜாதேவிக்கும் வந்திருந்தது.

அரச கட்டளை திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே என்றும் கேட்கக் கூடியவை. ஆலங்குடி சோமு, கவிஞர் முத்துக்கூத்தன், கவிஞர் வாலி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். 'வேட்டையாடு விளையாடு';, 'என்னைப் பாட வைத்தவன் ஒருவன்', 'முகத்தைப் பார்த்ததில்லை', 'புத்தம் புதிய புத்தகமே', 'ஆடிவா ஆடிவா', 'பண்பாடும் பறவையே என்ன தூக்கம்' என்று இனிமையான பாடல்கள் இத் திரைப்படத்தில் நிறைந்து இருந்தன.

'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற பாடலை இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலின் பொழுது தமிழரசுக் கட்சி பெரிதும் பயன்படுத்தியது. வாகனத்தில் வந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்து தேர்தல் கூட்டத்தை அறிவிக்கும் பொழுது ஒலிபெருக்கியில் இந்தப் பாடலையே ஒலிக்க விடுவார்கள். பாடலின் இடையில் வரும் வரிகள், 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ, அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ' என்பதை எதிரணிக்கு அறைகூவலாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னாளில் தமிழரசுக் கட்சியும், தமிழ் கொங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழர் கூட்டணியாக மாறிய பொழுதும், 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்பதை தங்களது உதயசூரியன் தேர்தல் சின்னத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற அந்தப் பாடலை கவிஞர் முத்துக்கூத்தன் எழுதி இருந்தார். முதலில் கவிஞர் வாலிதான் இந்தப் பாடலின் மெட்டுக்கு வரிகளை எழுதி இருந்தார். அவர், 'ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும்' என்று பல்லவி எழுதிக் கொடுக்க எம்.ஜி.ஆர் கடுப்பாகிப் போனார். 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தில் சிவாஜி நடித்திருந்தார். எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு அதுவே காரணம். அதன் பின்னரே கவிஞர் முத்துக்கூத்தனுக்கு அந்தப் பாடலை எழுத வாய்ப்புக் கிட்டியது. அவர் எழுதிய தொகையறாவே 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.. ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை'

https://www.youtube.com/watch?v=P8d1U0w9J-4

வழமையான எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் வீரம், கொள்கை, கோட்பாடு, போதனை என்று பாடல்கள் இருக்கும். அப்படியான பாடல்களை படத்தில் அவரே பாடி வருவார். அரச கட்டளை திரைப்படத்தில் சற்று மாறுதலாக விடுதலை வேண்டி மக்களை அழைக்கும் பாடல் ஒன்று படத்தின் நாயகிக்கு இருந்தது. அகிலனின் 'கயல்விழி' சரித்திரக் கதையில் விடுதலைக்கு ஆட்களைத் திரட்டுவதற்காக நாயகி கயல்விழி நாட்டியங்கள், நாடகங்களை நடத்துகிறாள். அதை ஒத்ததுதான் அரச கட்டளையில் சரோஜாதேவி பாத்திரமும். அகிலனின் 'கயல்விழி' கதை உரிமையை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் வாங்கி இருந்ததை இங்கே குறிப்பிடுகிறேன்.

இழந்து போன தங்கள் நாட்டை மீண்டும் பெற ஒரு பெண் பாடும் பாடலாக கவிஞர் வாலி எழுதிய பாடல் 'பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?' அந்தப் பாடல் 'தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா? பெற்றதாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா?' என்று பண்போடு கேட்டு 'கொடுத்த பாலில் வீரம் கலந்து கொடுத்தாள் உந்தன் அன்னை, குடித்த பிறகும் குருடாய் இருந்தால் கோழை என்பாள் உன்னை' என்று உரிமைக் குரலை உயர்த்திக் கேட்டு இறுதியில், 'விடுதலை காணத் துடித்து வா உறங்கியதெல்லாம் போதும் உடனே விழித்து எழுந்து வா' என்று மக்களை அழைப்பதாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=yv6jn_nwMQo

1/4/2016 2:22:38 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க: 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்