Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மாவீரர் துயிலுமில்லத்தை மிதிக்காதீர்கள்! – மாவை சேனாதிராஜாவுக்கு மாவீரரின் தந்தை பகிரங்க கடிதம்!!

<p>மாவீரர் துயிலுமில்லத்தை மிதிக்காதீர்கள்! – மாவை சேனாதிராஜாவுக்கு மாவீரரின் தந்தை பகிரங்க கடிதம்!!</p>
அறிவன்

 

திரு மாவை சேனாதிராஜா

தலைவர்

இலங்கைத் தமிழரசுக் கட்சி

ஐயா! 

தங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை விடுக்கும் தகுதி எனக்கிருப்பதாகக் கருதுகிறேன். ஏனெனில் மாவீரர் ஒருவரின் தந்தை நான். தயவுசெய்து மாவீரர் துயிலுமில்ல மண்ணை நீங்கள் மிதிக்காதீர்கள். சுடரேற்றி எனது மகள் போன்றோரின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள். கடந்த மே18 அன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவங்கள் வேதனையளித்தன. எனது மகளுக்கு முன்னதாக எறிகணை வீச்சில் எனது மகனையும் நான் இழந்திருக்கிறேன். எங்களது மனப்பாரத்தைக் குறைக்க அழுது தீர்த்து சுடரேற்றி விட்டு அமைதியாக நாங்கள் திரும்பவேண்டிய நிகழ்வு அது. அங்கே ஒருமித்த கருத்து எல்லோருக்கும் இருக்குமென எண்ண முடியாது. பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்க வேண்டிய கேள்வியை ஒரு கற்றுக்குட்டிப் பத்திரிகையாளர் உணர்வுபூர்வமான இந்த நிகழ்வில் கேட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வின் நோக்கமே திசை மாறிப்போனது. ஒரு மாற்றுத் தலைமையாக உருவாகக்கூடியது எனப் பலராலும் கருதப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்தச் சம்பவத்தைக் கண்டிக்காதமை எமக்கு ஏமாற்றமாக இருந்தது.

<p>மாவீரர் துயிலுமில்லத்தை மிதிக்காதீர்கள்! – மாவை சேனாதிராஜாவுக்கு மாவீரரின் தந்தை பகிரங்க கடிதம்!!</p>

எவ்வாறாயிருந்தாலும் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திப்பதை விடுத்து அடுத்த தேர்தலையே எப்போதும் சிந்திக்கும் நீங்களும், சம்பந்தன் ஐயா போன்றோரும் வாக்குப் பொறுக்கும் முதலீட்டுக்காக இவ்வாறான களங்களைத் தேர்ந்தெடுப்பதை எம்மைப் போன்றோரால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது யதார்த்தமானதே. எங்களது பயம் எதிர்வரும் நவம்பர் 27 அன்று தாங்களும் பிரசெல்ஸ் புகழ் சிறிதரனும் துயிலுமில்லங்களுக்கு சுடரேற்ற வந்து எங்களது பிள்ளைகளின் ஈகத்தை கொச்சைப்படுத்தி விடுவீர்களோ என்பதுதான். உங்களது பாதுகாவலர்கள், அடியாட்கள், புதிய நண்பர்களுடன் தனியான இடத்தில் கொழுத்திக் கொள்ளுங்கள். அந்தச் சுடரில் தங்களது ஈகோ, இறுமாப்பு, திமிர், துரோகம் அனைத்தும் எரிந்து சாம்பலாகட்டும்.      

தங்களது அரசியல் எங்களைப் போன்ற சாமானியருக்குப் புரியாது. எனவே சில விடயங்களை தங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இது வினாவா, கருத்தா என்பதும் எனக்கும் தெரியாது. தமிழரசுக் கட்சியினால் இருவர் முதலமைச்சர் ஆனார்கள். ஒருவர் சி.வி.விக்கினேஸ்வரன், அடுத்தவர் அகமட் நஷீர். இந்த அகமட் நஷீரை விட எந்த வகையில் விக்கினேஸ்வரன் ஐயா மோசமானவர்? கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்ததும் ஆட்சி அமைக்க வாரீர் -முதலமைச்சர் பதவி கூட தங்களுக்கு தருகிறோம் என வருந்தி அழைத்தும் அகமட் நஷீரின் கட்சி உங்களது அழைப்பை ஏற்கவில்லை. விருந்தின் கடைசியாக பாயாசம் அருந்துவது போல மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் அனைத்தையும் அனுபவித்து விட்டே மகிந்த இலையை எறிந்து விட்டு சம்பந்தன் இலை போட்டு அடுத்த பந்திக்குத் தயாராகினர். கடந்த பொதுத்தேர்தலில் அகமட் நஷீர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என கிழக்கு மக்களை கேட்டுக்கொண்டரா? இல்லையேல் குறைந்தபட்சம் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களியுங்கள் என்றாவது கோரினரா? அதுவும் இல்லை. எந்தக் கட்சியையுமே சாராத வடக்கு முதல்வர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரவேண்டுமெனவும் கட்சிக்கு நிதி சேகரிக்க வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்? முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான அவர், மண்டையன் குழுத் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரத்தினம் போன்றோருக்கும் பாலியல் வன்முறை மற்றும் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்ட குழுவுக்கு பொறுப்பாளரான ஜனாவுக்கும் வாக்களிக்குமாறு எவ்வாறு மக்களை கோர முடியும் என்ற யதார்த்தம் தங்களுக்கு ஏன் புரியவில்லை.

கல்வியமைச்சு தொடர்பாக தங்களுக்கு குழப்பம் எப்போதும் இருந்தே வந்துள்ளது. கிழக்கு முதல்வர் இடமாற்றம் உள்ளிட்ட   விடயங்களில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவித்திருந்தார். அப்படியானால் திரு. தண்டாயுதபாணி மாகாணசபையின் சிற்றூழியரா?       

இப்போது பொத்திக்கொண்டு வரும் ரோஷத்தை அப்போது யாரிடம் அடமானம் வைத்திருந்தீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் தொடர்பான விடயத்தை தூக்கிப்பிடித்தீர்கள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர் குருகுலராஜாவின் கடிதம் தொடர்பாக நீங்கள் ஏன் முடிவெடுத்தீர்கள்? அந்தக் கடிதத்தை முதலமைச்சரிடமே வழங்க வேண்டும் என ஏன் அறிவுறுத்தவில்லை? தான் நாட்டில் இல்லாத போது பதில் முதலமைச்சராக திரு. குருகுலராஜாவைத்தானே முதல்வர் நியமித்திருந்தார்.

அரியக்குடி ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரெயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவ்வளவு நேர்மையாக இருந்தமையினால்தான் நேரு மறைந்ததும் சாஸ்திரியை பிரதமராக்கினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜர். அப்படியிருக்க குருகுலராஜாவின் ராஜினாமாவை ஏன் நிராகரித்தீர்கள்.

இந்தக் காமராஜர் பற்றி இன்னொரு விடயமும் அறிந்தேன். இவரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு இந்தியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கோரினாராம். அதற்கு அவர், அமெரிக்காவுக்கு சென்ற தமிழ்நாட்டு முதல்வர் அண்ணாத்துரையைச் சந்திக்க மறுத்த நிக்சனைத் தான் எப்படித் சந்திப்பது என்று கேட்டாராம். இவ்வளவுக்கும் சட்டசபைத் தேர்தலில் அவரைத் தோற்கடித்த கட்சியின் தலைவர் அண்ணாத்துரை. அவருக்கு தனது முதலமைச்சர் அண்ணாத்துரையை அவமதித்தது அல்லது கௌரவிக்கக் தவறியமை பாரதூரமான விடயமாக இருந்தது. ஆனால் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? நான் வடக்கு முதல்வருடன் பேசமாட்டேன் என்ற ரணிலைத் தேடிச்சென்று சந்தித்தீர்கள். வடக்கு முதல்வர் பதவி மீது கண் வைத்திருந்த தங்களையும் மீறி விக்கினேஸ்வரன் முதல்வரான சூழ்நிலை அப்படியொன்றும் இரகசியமானதல்ல.    

அதுமட்டுமா? தாங்கள் தந்தை செல்வா உருவாக்கிய கட்சியின் தலைவராக விளங்குகிறீர்கள். பாசி என்று அழைக்கப்படும் பாலிப்போடி சின்னத்துரை போன்றோரால் கவிஞர் காசி ஆனந்தனின் பிறந்த நாள் தொடர்பான நிகழ்வொன்றுக்கு தந்தை செல்வா அழைக்கப்பட்டிருந்தார். அதனை ஏற்று மட்டக்களப்புக்கு புகையிரத மூலம் அவர் பயணமானார். மட்டு. புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய அவரிடம் பாசியும், ராஜ்மோகனும் இந்நிகழ்வு தொடர்பான துண்டுப்பிரசுரத்தை வழங்கினர். அதைப் பார்த்ததும் தந்தை செல்வாவின் முகம் மாறியது. 'இதில் ராஜதுரையின் பெயர் போடப்படவில்லையே... ஏன்?' எனக் கேட்டார். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. தனக்காக ஏற்பாடு செய்த தங்குமிடம் போன்ற அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு எவரையும் சந்திக்காமல் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு விட்டார் அவர்.

தந்தை செல்வா, பாசி, ராஜ்மோகன் போன்றோரின் நினைவுகள் இருந்திருந்தால் வடக்கு முதல்வரை அவமதிக்கும் ரணில், சரத் பொன்சேகா போன்றோருடன் கைகோர்த்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம். இன்று உங்களைச் சூழவுள்ளோர் அனைவரும் அரசியல்வாதிகள். சயந்தன், அஸ்மின், ஆர்னோல்ட், பிரமுக வங்கி சிவஞானம், சுமந்திரன் போன்றோர்தான் தங்களை வழி நடத்துகின்றனர். 

மட்டக்களப்பில் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் மட்டு சிறையில் தாங்கள் அரசியல் கைதியாக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தீர்கள். ஆனால் போராளிகளை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்ட சுமந்திரனிடம் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தை ஒப்படைத்தீர்கள். சந்திரிக்கா ஜே.வி.பி உடன் கூட்டுச் சேர்ந்தவுடன் சிறையில் இருந்த சகல ஜே.வி.பியினரும் எந்த வழியில் விடுதலையாகினரோ அந்த வழியில் இவர்களும் விடுதலையாகுவர் என எதிர்பார்த்தோம். ஆனால் இவர்களை விடுவித்தால் போர்க்குற்றம் புரிந்த படையினரைத் தண்டிக்க முடியாமல் போய்விடும் என விளக்கமளிக்கப்படுகிறது. ஜே.வி.பியும் இலங்கைப் பிரஜைகள்தான். புலிகளும் இலங்கைப் பிரஜைகள் தான் என்பது தங்களுக்கு ஏன் புரியவில்லை? எழுத இன்னும் பல விடயங்கள் உள்ளன. தலையில் சிவப்பு ரிபனைக் கட்டியபடி தீவிரவாத இளைஞர் என அடையாளப்படுத்தப்பட்ட மாவை அல்ல இப்போது இருப்பது.

தங்களை பிரான்சில் அவமதித்தபோது நாங்கள் அது தவறு எனச் சொன்னோம். ஆனால் நீங்கள் மூன்றாந்தர அரசியல்வாதி என்பதை நிரூபித்துவிட்டீர்கள். தங்களது சகா சிறிதரனும் அவ்வாறே. படகில் நின்று பிரபாகரனைப் போல் கை நீட்டி போஸ் கொடுப்பதால் மட்டும் எல்லோரும் பிரபாகரனாகி விட முடியாது. முதல்வரின் விடயத்தில் இவர் செய்த திருக்கூத்துக்கள் எம்மால் மன்னிக்க முடியாதவை.

எனவேதான் இருவரிடமும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம். மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் இருவரும் கால் வைக்காதீர்கள் என்று. தங்கள் மனதில் எங்காவது ஒரு மூலையில் அவர்களின் நினைவு இருக்குமானால் எங்களது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லா மாவீரரின் பெற்றோரின் சார்பாகவே இந்த வேண்டுகோள் விடுக்கிறேன்.   

இவ்வண்ணம்

மாவீரர் அறிவிழியின் (26.04.2009 வீரச்சாவு) தந்தை

அறிவன்          

6/21/2017 5:53:25 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்