Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மறதி ஒரு மந்திரம்! அரசியலில் ராஜதந்திரம்!!

மறதி ஒரு மந்திரம்! அரசியலில் ராஜதந்திரம்!!
பகலவன்

 

ஒரு விடயத்தை எப்படிச் சாத்தியமாக்கலாம் எனத் திட்டமிட்டுச் செயல்படுத்துபவனே தலைவன். சாத்தியமாகக் கூடிய விடயத்தையும் செய்யாது அதனைப் பிச்சைக்காரனின் புண்போல் தொடர விடுபவனும், தன்னால் அது செய்ய முடியாமற் போனதற்கான காரணங்களை வரிசையாக அடுக்குபவனும் தான் அரசியல்வாதி.     

'அரசியல் கைதிகள் தொடர்பில் மீளாய்வு வழக்கினை நீதிமன்றில் தாக்கல் செய்யும் பட்சத்தில் அந்த வழக்கு நடவடிக்கை நீண்ட காலம் இழுபடுவதற்கு நாமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாக அமைந்துவிடும். ஒரு நீதிமன்றில் இருந்து இன்னொரு நீதிமன்றத்துக்கு வழக்கினை மாற்றுவது தொடர்பில் மீளாய்வு மனு தாக்கல் செய்யும் போது, அந்த வழக்கு விசாரணை செய்து முடிவதற்கு குறைந்தது ஒன்று அல்லது ஒன்றரை வருட காலம் எடுக்கும். 

அவ்வாறான வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தால் சில சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபர் சொல்லுவார்…. அந்த வழக்கு முடியும் வரைக்கும் அரசியல் கைதிகளின் விவகாரத்தில் தான் ஒன்றும் செய்ய முடியாது என்று…. நீங்கள் நீதிமன்றம் போய் விட்டீர்கள், நீதிமன்றின் கீழ்ப்படி நான் செயல்படுவேன் என்று…   

இதனால்தான் மீளாய்வு வழக்கினைத் தாக்கல் செய்யுமாறு நான் ஆலோசனை கொடுக்கவில்லை. ஏனென்றால் அவ்வாறான ஒரு வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அந்த வழக்கு நடவடிக்கை இழுபடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது என்பதால் சட்டமா அதிபர் சொன்னார், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளையும் மீண்டும் வவுனியா நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று. ஆனால் சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் தமிழ் பிரதேசத்தில் தாங்கள் வந்து சாட்சியமளிக்க மாட்டார்கள் என்று சொன்னது தான் வழக்கினை அனுராதபுரத்துக்கு மாற்றுவதற்கான ஒரே காரணம் என்று கூறினார்’     

இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்

வடமராட்சி கிழக்கு குடத்தனை அ.த.க பாடசாலைத் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஆடு நனைகின்றதென்று ஓநாய் அழுததாம். நாம் அறிந்தவரை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கு வந்த பார்கின்சன் நோய் சுமந்திரனுக்கு இன்னமும் வரவில்லை.  

அந்தச் செய்தியாளர்கள் தொழிலுக்குப் புதிது என்பதால் முக்கியமான ஒரு கேட்கவியைக் கேட்கவில்லை. ஆனால் செய்தியாளர்கள் மைலந்தனை வழக்கை நினைவுபடுத்திக் கேட்காமல் இருக்க வேண்டும் என்று அவர் யேசுபிரானை வேண்டியிருப்பார். அப்படி வேண்டாமலிருந்தால் அவருக்கு அரை பார்கின்சன் நோய் தானும் இருந்திருக்கும். பார்கின்சன் என்பது மறதி நோய். கடந்த காலம் எதுவும் நினைவுக்கு வராது. 

மறதி ஒரு மந்திரம்! அரசியலில் ராஜதந்திரம்!!

கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில் கஜேந்திரகுமார் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினார் சுமந்திரன். மைலந்தனையில் தமிழ்மக்களைப் படுகொலை செய்த வழக்கில் எதிரிகளான இராணுவத்தினர் சார்பில் கஜேந்திரகுமார் ஆஜரானார் எனக் குறிப்பிட்டார். தேர்தல் பிரச்சார இறுதி நாளன்றே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது உண்மைக்கு மாறான தகவல். எனவே கஜேந்திரகுமார் உடனே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டு தான் அந்த வழக்கில் ஆஜராகவில்லை என்பதற்கான பதிலை ஆதாரமாக வெளியிட முயற்சித்தார்.     

அந்த விடயத்தை வெளியிட ஊடகங்கள் மறுத்து விட்டன. தேர்தல் பிரச்சார நாள் முடிந்துவிட்டதால் அது தொடர்பான விடயங்களை வெளியிடுவது சட்டத்துக்கு முரணானது என அவை காரணம் கூறின. அவ்வாறான தில்லுமுல்லுகளைச் செய்தே யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தோல்வி அடைந்தது. (தமிழ்த் தேசிய முன்னணி)  

பின்னர் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கஜேந்திரகுமார், சுமந்திரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். அதில் சுமந்திரனின் இந்தத் திருகுதாளத்தை கஜேந்திரகுமார் வெளியிட்டார். கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அது தனது ராஜதந்திரம் என்ற பாணியில் சுமந்திரன்   மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

'மைலந்தனை விவகாரம் என்பது எவ்வளவு பாரதூரமானது என்பதனை ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம்  (November 5, 2016-12:55 pm) தனது ஊடகமான தினக்கதிரில் 'கொலை குற்ற விசாரணைகளும் சிங்கள யூரிகளின் தீர்ப்புகளும்' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையின் சில பகுதிகளை நன்றியுடன் அப்படியே தருகிறோம்.

மட்டக்களப்பு எல்லைக்கிராமமான மயிலந்தனை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் 9ஆம் திகதி இரவு 35 தமிழ் பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் இராணுவ அதிகாரி டென்சில் கொப்பேகடுவா கண்ணிவெடியில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் அன்றிரவு அக்கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை வெட்டியும் சுட்டும் கொன்றனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த படுகொலையில் 18 இராணுவத்தினர் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 85 குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் இவ்வழக்கு விசாரணை நடைபெறுவது தமக்கு பாதுகாப்பு இல்லை என்றும் வழக்கை அனுராதபுரம் அல்லது கொழும்புக்கு மாற்றுமாறு குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் கோரினர்.

இதனையடுத்து கொழும்பு மேல்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது இதனையடுத்து சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் கோரியபோது அக்கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிங்கள யூரிகள் முன்னிலையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்றது

சாட்சிகள் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பாதிக்கப்பட்ட மயிலந்தனை மக்கள் கொழும்புக்கு சென்று சாட்சியமளித்தனர்.

இறுதியாக 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். சிங்கள யூரிகள் அனைவரும் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் குற்றம் அற்றவர்கள் என்றும் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர் என்றும் யூரிகளின் முடிவின்படி இந்த வழக்கை தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என தீர்ப்பு வழங்குவதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

யூரிகள் வழங்கிய தீர்ப்பில் திருப்தி கொள்ளாத மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஸ்கந்தராசா யூரிகள் மீண்டும் நன்றாக ஆலோசித்து முடிவுக்கு வருமாறு ஆலோசனை வழங்கி சில மணிநேர அவகாசத்தையும் வழங்கினார். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் யூரிகளுக்கு நீதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஆனால் சிங்கள யூரிகள் ஆலோசித்து விட்டு மீண்டும் வந்து குற்றம் சாட்டப்பட்ட இராணுவத்தினர் நிரபராதிகள் என்றும் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்தனர். இதனையடுத்தே யூரிகளின் முடிவின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்'

***

மைலந்தனை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் இராணுவத்தினர். அதாவது சிங்களவர். பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தமிழர்கள். மட்டு.மேல்நீதிமன்றில் நடைபெற்ற இவ்விசாரணைகளை எதிரிகளின் வேண்டுகோளின்படி கொழும்புக்கு மாற்றமுடிகிறது. யுத்தம் கொடூரமாக நடந்துகொண்டிருக்கையில் மட்டக்களப்பிலிருந்து சாட்சிகளைக் கொழும்புக்கு கொண்டு செல்ல முடிகிறது. யூரிகளையும் சிங்களவர்களாக நியமிக்க முடிகிறது. 'நன்றாக ஆலோசித்து முடிவுக்கு வருவார்கள். போதிய சாட்சிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என மேல்நீதிமன்ற நீதிபதி கூறியதும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவர் தமிழர். ஆனால் அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டும் இதற்கு மாறான முடிவு எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்கும் சுட்டிக் காட்டி விளங்கப்படுத்த சட்டத்தரணியான சுமந்திரனால் முடியாதா?

மைலந்தனை படுகொலையாளிகளுக்கு ஒரு நீதி - அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதியா? 

இது வேண்டுமென்றே செய்யும் அநீதி. ஏற்கெனவே தென்னிந்திய திருச்சபை தொடர்பான வழக்கொன்றில் (கிளிநொச்சி நீதிமன்று) ஒரு பகுதியினரை இவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் குறிப்பிட்டார் சுமந்திரன்.   

ஆட்சேர்ப்பு தொடர்பான விடயத்தில் புலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தவர் இவர். தமிழர் தரப்பால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு உடனடியாக நிறைவேற்றியது என்றால் இதுதான் முதல் தடவை. கணேசசுந்தரம் கண்ணதாசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இந்த சுமந்திரனிடம் தான் அரசியல் கைதிகளின் விவகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுமாறு பூனைகளிடம் எலிகளை ஒப்படைத்தது போல்.  

சுமந்திரன் விஞ்ஞானபூர்வமாக வாதிட்டார் என்று கூறவும் யாழ்ப்பாணத்தில் ஊடகங்கள் உள்ளன. என்ன விஞ்ஞானம் அது? விளையாட்டு விஞ்ஞானம். கருணா உட்பட ஆடும் ஆளும்தரப்பு எம்.பிக்களுடன் கிரிக்கட் ஆடி மகிழ்ந்தவரல்லவா இவர். அதையும் தனது ராஜதந்திரம் என்று கொழும்பு மகசின் புர் வாட்டில் உள்ள அரசியல் கைதிகளிடம் கூறி தனது முதுகில் தானே தட்டிக் கொண்டவர்.

கோத்தபாயவுடன் தான் டின்னரில் கலந்து கொண்டவர் என்று பெருமையாக பேசிக்கொண்டவர்.

இவர் அரசியல் கைதிகளின் விவகாரத்தை எப்படிக் கையாளுவார்? பல்கலைகழக மாணவ அமைப்பின் அழைப்பை நிராகரித்த விதம் எல்லாவற்றையும் புரிய வைக்கிறது

இக் கட்டுரையின் முதல் பந்தியை மீண்டும் படிக்கவும்.  

11/4/2017 1:10:16 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்