Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்

<p>பெயரின் அர்த்தத்துடன் வாழ்ந்து காட்டிய குருநாதன்</p>
பகலவன்

 

இலங்கையின் மிக மூத்த தமிழ் பத்திரிகையாளர்கள் இருவர். ஒருவர் எஸ்.எம்.ஜி எனப்படும் கோபு ஐயா (எஸ்.எம் கோபாலரத்தினம்), அடுத்தவர் சின்னையா குருநாதன். கடந்த 01.09.2017ம் நாள் திரு. சின்னையா குருநாதன் இயற்கையெய்தினார்.

பொருத்தமான இடத்தில் தேவையான விடயங்களை சம்பந்தப்பட்டோரிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் குருநாதன் மிக வல்லவர். கோபு ஐயாவைப் போலவே நினைவாற்றல் மிகுந்தவர். ஒரு குறிப்பிட்ட செய்தியை அப்படியே வெளியிடுவதை விட அதனுடன் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட விடயங்களை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் செய்தியின் முக்கியத்துவத்தைக் வெளிக்கொணரும் பாங்கு அவரிடம் இருந்தது.

குறிப்பாக திரு பிரபாகரன் இந்தியப் பிரதமரின் அழைப்பையேற்று இந்தியா சென்றமை, தொடர்ந்து ஆயுதக்கையளிப்பு முதலான விடயங்களில் இவரது ஆற்றல் தனித்துவமாகத் தெரிந்தது. விடயத்துக்கு அப்பால் போகாமல் தான் எதனை அறிய விரும்புகிறாரோ அதனைப் பிரபாகரனிடம் கேட்டார். இச் சந்திப்புக்களில் இவர் கேட்ட கேள்விகளே ஏனையோருக்கும் புதிய தகவல்களை வெளியிட உதவியாயிருந்தன. பிரபாகரனுடன் அருகில் நின்ற இவரும் ஏனைய தமிழ் ஊடகவியலாளர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சமாதான காலத்தில் திருமலை முற்றவெளிப் பகுதியை சிங்களவர் ஆக்கிரமிக்க முனைந்தனர். தமிழ் மக்கள் ஒன்று திரண்டு சாத்வீக வழியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். முடிவில் தமிழரின் எதிர்ப்புக்குப் பலன் கிடைத்தது. அச் சமயம் தன்னைச் சந்திக்க வந்த இன்னொரு ஊடகவியலாளரிடம், 'சிங்கக் கொடிக்கு எதிராக மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் நிகழ்ந்த போராட்டத்துக்குப் பின் திருமலைத் தமிழர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டம் இது' எனக் குறிப்பிட்டார்.

இரு தலைமுறையினரதும் போராட்டங்களை நேரில் பார்த்தவர் அவர். சிங்கக்கொடிக்கு எதிரான அந்த போராட்டத்தைப் பற்றி அவர் விபரிக்கவும் தவறவில்லை. 'மணிக்கூட்டுக் கோபுரத்தின் உச்சியில் சிங்கக்கொடியினைக் கட்டியிருந்தனர் சிங்களவர். பெப்பரவரி 04. சுதந்திரநாளன்று அதனைக் கட்டவேண்டுமென சிங்களவர் தீர்மானித்தனர். இதற்கெதிரான போராட்டத்தை தமிழரசுக் கட்சி ஒழுங்கு செய்திருந்தது. வேறொரு கொடி கட்டப்பட வேண்டுமென்பது அவர்களின் தீர்மானம். இனமுறுகலைத் தொடர்ந்து அங்கே எந்தக் கொடியும் ஏற்றுவதில்லை என்ற பொலிசாரின் கோரிக்கைக்கு உடன்பட்டனர் இரு தரப்பினரும். ஆனால் இந்த உடன்பாட்டுக்கு மாறாக சிங்களவர் சிங்கக்கொடியை ஏற்றிவிட்டனர். காலையில் இதனைக் கண்ணுற்ற தமிழர் தரப்பு இதற்கெதிராக தமது போராட்டத்தை நடத்தியது.

நடராஜா என்பவர் இதில் முன்னணியில் நின்றார். (தமிழரசுக் கட்சித் தொண்டரான இவர் லாவோஜி லிப்டன் தேயிலையை பெட்டி இணைக்கப்பட்ட சைக்கிளில் கொண்டு சென்று விநியோகிப்பவர்) கூட்டமாக வந்த தமிழர் தரப்பினரை நோக்கி சிங்களவர் ஒருவர் சுட்டார்.  நடராஜன் பலியானார். அந்தச் சிங்களவர் இப்போதும் இருக்கின்றார். பொல்லூன்றியபடி நகரக் கடைத் தெருக்களில் அவர் வருவதைக் கண்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டார்  குருநாதன். அந்தச் சிங்களவரின் பெயரையும் குறிப்பிட்டார். (தற்சமயம் அந்தச் சிங்களவர் சில வேளை உயிரிழந்திருக்கலாம்)

இவரைச் சந்தித்த ஊடகவியலாளர் பிரபாகரனுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வழங்கியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். 'என் வாழ்வில் மிக முக்கியமான தருணமல்லவா இது' எனவும் குறிப்பிட்டார்.

இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்திருந்தும் தற்போதைய தமிழ்த் தலைமை சிங்கக்கொடியை ஆட்டி மகிழ்ந்தது. இவற்றையெல்லாம் தமிழ் ஊடகவியலாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். குறிப்பாக கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரம் முட்டை போட்ட ஆமைபோல எவ்வளவோ அனுபவங்களையும் செய்தி உலகில் சாதனைகளையும் புரிந்த குருநாதன் எப்போதுமே அமைதியாக இருப்பார். தனது அனுபவங்களில் சிலவற்றை இவர் புத்தக வடிவிலும் கொண்டுவந்திருந்தார். அவரது வாழ்வு வரலாறையே புரட்டிப் போட்டவர்கள் நாங்கள் என தம்பட்டம் அடிக்கும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். தினபதி, சிந்தாமணி, உதயன் முதலான பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பின்னர் சுயாதீன ஊடகவியலாளராகவும் விளங்கினார். புனைப்பெயர்களில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்தன.

கோபு ஐயா, குருநாதனுக்கு அடுத்ததாக கானமயில்நாதன், பெருமாள் போன்றோர் இன்னும் நம்மிடையே வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் சேவையும் அனுபவவும் மதிக்கப்பட வேண்டியவை. இவர்களைக் கௌரவத்துடன் நடத்த அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்கள் முயலவேண்டும்.        

9/3/2017 1:17:19 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்