Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தமிழ் மக்களின் அரசியற் தோல்வி ஆரம்பமாகிறதா?

தமிழ் மக்களின் அரசியற் தோல்வி ஆரம்பமாகிறதா?
அரசு மாதவன்

 

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திய செய்திகளில் கூடுதல் கவனம் பெற்றிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று உருவாகி வருவது தொடர்பாக இருக்கிறது. இதேவேளை அதிகம் கவனம் கொடுக்கப்படாத விடயமாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதாகவும் இருக்கிறது.

வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை தன்னை கூட்டமைப்புக்கு மாற்றானதோர் அமைப்பாக தமிழ்த் தேசியத் தளத்தில் அடையாளப்படுத்தியுள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி என்று கிண்டல் செய்யப்படமுடியாத அளவுக்கு உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளை வென்றெடுத்திருக்கிறது. இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் குறிப்பிடத்தக்களவு பிரதிநிதிதித்துவத்தைப் பெற்றிருக்கிறது.

கிழக்கைப் பொறுத்தவரை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளது. இக் கட்சியின் வெற்றி முஸ்லிம்களின் நலன்களை விட தமிழர்களின் நலன்களை முன்நிறுத்தி கடந்த காலங்களில் செயற்பட்டதால் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான போட்டி அல்லது மாற்று என்பது தமிழர் தேசிய நலன் என்ற எல்லையை விட பிராந்திய நலன் என்ற எல்லையை தொட்டு நிற்கிறது.

வடக்க கிழக்கு என்று இரு மாகாணங்களிலும் மக்கள் ஆதரவினை பெற்ற கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தொடர்ந்தும் விளங்குகிறது. கூட்டமைப்பின் அரசியற் கபடத்தனத்தால் அது மக்கள் ஆதரவை இழந்து வருகிறது எனவும் தெரிகிறது. இங்கு அரசியற் கபடத்தனம் எனக் குறிப்பிடப்படுவதனை மக்களுக்கு உண்மையில்லாத, மக்களுக்கு ஓரு முகத்தினையும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு ஒரு முகத்தினையும் காட்டிச் செயற்படுவதனால் தோன்றியுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடாகக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தற்போது ஆதரித்து நிற்கும் மக்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய தமிழ்க்கட்சியை ஆதரிக்கும் மனப்பாங்கில் ஆதரிக்கக்கூடும். மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பால் அடையாளம் காட்டப்பட்ட கட்சி என்ற பதாகையும் வாக்குகளுக்கு உதவக்கூடும். கூட்டமைப்பில் சிலர் இன்னும் விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமாகச் சென்று தலைவரால் அல்லது 'அண்ணையால்' அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்லது சின்னம் என்று கூறிக்கொள்வதும் தேர்தல் வெற்றிக்குத் துணைபுரியக்கூடும்.  தமிழ் மக்களின் ஒற்றுமை அவசியம் எனவும் அதற்குத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்ற கோசமும் வாக்காளர்களிடம் எடுபடுக் கூடும்.

தமிழ் மக்களின் அரசியற் தோல்வி ஆரம்பமாகிறதா?

ஆனால் இவையெல்லாம் ஒரு குறுங்கால வெற்றிக்கே போதுமானவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுடனும் தேவைகளோடும் விருப்புகளோடும் இணைந்து நிற்காது வேறு எவருக்கும் சேவகம் செய்தவாறு இயங்கின் மக்கள் ஆதரவினைப் படிப்படியாக இழந்து விடுதல் தவிர்க்க முடியாமல் போகும். தற்போது நடந்து வருவதனையும் இப் பின்னணியுடனேயே புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு ஒரு கேள்வி எழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி தமிழ் மக்களின் வீழ்ச்சியாகி விடுமா என்பதே இக் கேள்வி.

இக் கேள்வி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியை எக் கட்சிகள் பயன்படுத்துக் கொள்கின்றன என்பதில் இருந்துதான் எழுகிறது. இதனை தமிழ்த் தேசியப் பேரவை, தமிழர் தாயகம் பூராகவும் நிரவிக் கொள்ளுமானால் அது தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்தும். மாறாக சிங்களத் தேசியக் கட்சிகளும், இக் கட்சிகளைச் சார்ந்து நிற்கும் தமிழர் கட்சிகளும் கூட்டமைப்பின் வீழ்ச்சியினைக் கணிசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாயின் இது தமிழ் மக்களுக்கு ஒரு வகையில் அரசியற் தோல்வியாகி விடக்கூடும். நடந்த முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் இவ் எச்சரிக்கையினை வெளிப்படுத்தி நிற்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் அரசியற் கட்சிகளிடம் மாகாணசபைகளையும் உள்ளூராட்சி சபைகளையும் நிர்வகிக்கக் கொடுத்து மக்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தும் திட்டத்தை சூழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறது. இதனைச் சரியாகப் புரிந்து நம்மவர்கள் தமது ஆட்டத்தை ஆடுவதாகத் தெரியவில்லை. மக்கள நலன், மக்கள் உரிமை என்பதனை விட சொந்த நலன்களே பல அரசியல்வாதிகளை வழிநடத்துகிறது என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. இது எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியே தீர்மானித்து வழிநடாத்துகிறது. தமிழரசுக் கட்சிக்குள் மக்கள் நலன் சார்ந்த மாற்றங்களை எற்படுத்த முடியுமா? இதற்கான சூழல் கட்சிக்குள் இருக்கிறதா? தமிழரின் தேசிய அரசியல் வலிமையை சீர்குலைப்பதற்காக திட்டமிட்ட ஊடுருவல் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது என்று எழுப்பப்படும் சந்தேகம் குறித்து கட்சியின் உள்மட்டத்தில் உரையாடல் எதும் உண்டா?

தமிழரசுக்கட்சி தனது போக்கில் மாற்றங்களை எற்படுத்தாது தொடர்ந்து மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு செயற்படுமானால், தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தேசிய உரிமைக் கோரிக்கைளை நீர்த்துப்போகும் வகையிலான அரசியலைச் செய்யுமானால் இதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது. ஆனால் தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சியினை சிங்களத் தேசியக் கட்சிகளும் அவர்களது தமிழ்க் கூட்டாளிகளும் பயன்படுத்தாதவாறு எவ்வாறு பாதுகாக்க முடியும்? இது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து சிந்திக்கும் அனைவரதும் கரிசனைக்கும் உரிய விடயமாகும்.  

3/16/2018 12:34:34 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்