Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உள்ளூராட்சி மன்ற அதிகார அரசியல்: வென்றது கூட்டமைப்பா? டக்ளஸா?

<p>உள்ளூராட்சி மன்ற அதிகார அரசியல்: வென்றது கூட்டமைப்பா? டக்ளஸா?</p>
அரசு மாதவன்

 

உள்ளுராட்சிமன்ற சபைகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய முறைமை குறித்து பல்வேறு வகையிலான கருத்துகள் பொதுவெளியில் உலவுகின்றன. ஈ.பி.டி.பி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் கூட்டமைப்பு அநேகமான உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தது. இதனைக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சியின்) கெட்டித்தனம், இராஜதந்திரம், பெருவெற்றி என ஒரு சாராரும், கூட்டமைப்பு சோரம் போய்விட்டது, தமிழ்த் தேசியத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டது என மறுசாராரும் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இச் சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் கூட்டமைப்பு வெற்றியடைந்திருக்கிறதா? தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் ஏதாவது முன்னேற்றம் இதன் மூலம் ஏற்பட்டிருக்கிறதா?

இக் கேள்விகளுக்கு இல்லை என்பதே இக் கட்டுரையின் பதில். கூட்டமைப்பு உண்மையில் இச் சபைகளைக் கைப்பற்றிதன் மூலம் தனது தோல்விக்கு வழிவகுத்திருக்கிறது என்றே கூறவேண்டும். உண்மையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக் கட்சியும், சிங்கள தேசியக் கட்சிகளுமே கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் ஊடாகப் பயன்பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆதரவு கோரிப் பேச்சுக்கள் நடாத்தியமை பகிரங்க இரகசியம். டக்ளஸ் தேவானந்தாவும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதற்குப் பிரதிபலனாக தான் சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக வருவதற்கு கூட்டமைப்பின் ஆதரவை டக்ளஸ் கோரினார். இதற்கு சுமந்திரன் சம்மதம் வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான ஆட்சியினைப் பாதுகாத்து நிலைப்படுத்திய பின்னர் இது குறித்த ஏற்பாடுகளை ரணிலுடன் பேசி மேற்கொள்வதாக உடன்பாடு காணப்பட்டிருப்பதாக கசிந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டக்ளஸ் அமைச்சராக வருவததற்கு இதுவரை தடையாக இருந்து வந்த கூட்டமைப்பினை உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் டக்ளஸ் வெற்றி கொண்டு விட்டார். டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரை அமைச்சராக இருப்பதை முக்கியமான அரசியல் இலக்காகப் பார்ப்பவர். அவர் தனது கட்சியை நிலைநிறுத்தியதும், பெரும் பணமும் சொத்தும் சேகரித்ததும் அமைச்சர் பதவியுடன் ஒட்டியிருந்துதான். ஆட்சிகள் மாறினாலும் அந்தந்தக் கட்சிகளுடன் இணைந்து இலகுவாக அமைச்சர் பதவியைப் பெற்று வந்தார். தற்போதய நல்லாட்சி அரசாங்கத்தின் பிதாமகர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருப்பதனால் கூட்டமைப்பை மீறி அமைச்சராக டக்ளஸால் முடியவில்லை. இப்போது கூட்டமைப்பு மூலமாகவே அமைச்சராகும் தனது இலக்கை அடைந்துகொள்ள டக்ளஸ் திட்டம் வகுத்து விட்டார். இது டக்ளஸ் தேவானந்தாவுக்கு அவரது அரசியலில் உயர்ச்சி தரக்கூடிய வெற்றியாகக் கருதப்படக்கூடியது.

சிங்களத் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை தமக்கு உகந்த அரசியலை நடத்துக்கூடியவர்களை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியில் அமர்த்த வேண்டும். வடகிழக்கு அரசியலைத் தீர்மானிப்பதில் ஒரு பாத்திரத்தை அவர்கள் வகிக்க வேண்டும். உள்ளூராட்சி சபை போன்றவற்றில் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சிக்க வைத்து, அவர்களை நிர்வாகச் சிக்கல்களிலும் சீர்கேடுகளிலும் உழல விட்டு அவர்களின் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க வேண்டும். அவர்களின் இந்த இலக்குக்கு கூட்டமைப்பு நன்றாகவே ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த வகையில் இது சிங்களத் தேசியக் கட்சிகளுக்கு வெற்றியாகவே அமைகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தாயகத்தில் தானே பெரிய கட்சி என்பதனை வெளிப்படுத்தியதை விட பெரிதாக எதனையும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலம் சாதிக்கப் போவதில்லை. மாறாக தமிழ்த் தேசியத்தைப் போலியாகவே பேசிக்கொண்டிருக்கும் கட்சியே தாம் என்பதனை கூட்டமைப்பினர் முரசறைந்து கூறும் வகையிலேயே உள்ளூராட்சிமன்ற அதிகாரக் கைப்பற்றல் அமைந்திருக்கிறது. இதன் பாதகமாக விளைவுகளை கூட்டமைப்பு எதிர்காலத்தில் சந்திப்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

4/7/2018 11:31:09 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்