Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சுவடுகள் தொடரும்

<p>சுவடுகள் தொடரும்</p>
பா.செயப்பிரகாசம்.

 

இன்குலாப்: சாகாத வானம் - பகுதி 8  

அவர் மறைவுக்குப் பின் தமிழ் இந்து நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. 'அகற்றப்பட்ட ஒரு காலின் கட்டைவிரல் வலிக்கிறது. கால் அரிக்கிறது. கையைக் கொண்டு போனால் அங்கே கால் இல்லை.' என்று அவர் சொன்னதாக விவரிக்கிறது கட்டுரை.

'என் மகளே, ஒரு மருத்துவர்தானே. மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது. அதற்குப் பெயர் 'ஃபாண்டம் பெயின்' என்கிறார்கள். அவயத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன். அப்படியானால் உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா என்ன... என்ன... இது?'

கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டதாகவும், விடைதெரியாத கேள்விகள் என்றும் இன்குலாப் விடைபெற்றுச் சென்ற பின்னும் தொடரும் விசித்திரமான கேள்விகள் என்றும் கட்டுரை முடிகிறது.

உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? என்று கேட்கிற வரை சரி. ஆம் அவ்வாறே தான், உடலும் மூளையும் ஒன்றையொன்று இயக்குகின்றன. ஒன்றையொன்று சார்ந்து இயங்குகின்றன. ஒன்றையொன்று சார்ந்து இயங்கியதால் ரத்த நாளங்கள் வழி பதிவு செய்யப்பட்ட வலி இன்னும் உணர்வாகத் தொடருகிறது. இதில் சிருஷ்டியின் சூட்சுமம் எதுவுமில்லை. 'நமது இருத்தலை உணர வைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா' என்று கேட்கிற போது, கேள்வியும் தொனியும் இன்குலாபுடையதாக இல்லை. தனது 'கருத்துமுதல்வாதக் கருத்தை' கட்டுரையாளர் இன்குலாப் மேல் ஏற்றியிருப்பதாகத் தெரிகிறது.

சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் உடன்பணியாற்றிய பேரா.புலவர் உசேன் 'உகரம்' என்றொரு இலக்கிய இதழைக் கொண்டு வருகிறார். நவம்பரில் வெளிவந்திருக்க வேண்டிய இரண்டாவது இதழ் டிசம்பரில் இன்குலாப்பின் மறைவுக்குப் பின் வெளியானது. ஆனால் இன்குலாப் மறைவுக்கு முன் ஒரு மாதம் முன் அவர் எழுதிய கவிதை நவம்பர் இதழில் வெளியாகியிருந்தது.

'கண்ணா மூச்சு' கவிதைத் தலைப்பு.

கண்ணாமூச்சு!

<p>சுவடுகள் தொடரும்</p>

உயிர்ப்பின் போதே என்னுடன்

ஒப்பந்தம் செய்தது காலம்.

தான் விரும்பும்போது தன்னோடு

கண்ணாமூச்சு ஆடவேண்டும்.

 

கருவறைச் சுவரில்

கைச் சாத்திட்டோம்

 

தவழும்போதே ஆட்டம் தொடங்கியது

நான்தான் ஜெயித்தேன்.

 

பிள்ளைப் பருவமும்

இப்படியே தொடர்ந்தது

இளமையில் ஒப்பந்தம் குறித்து

மறந்தே போனோம்.

 

என் கிளைகளில் பறவைகள் பேசின

கருங்குயிலும் வரிக்குயிலும்

இடையறாது கூவின

செண்பகக்குயில் கூடுகட்டிக்

குஞ்சும் பொரித்தது.

 

வெளியும் ஒளியும்

எமக்கு சாட்சியமாயின.

 

காலம்,

என் பற்கள் சிவவற்றைப் பிடுங்கியது

ஒரு கண்ணில் ஒளியைத் திரையிட்டது

மூக்குக்கு மனத்தை மறைத்தது

இதயத்தைக் கீறிப்பார்த்தது

ஒரு காலைப் பறித்து

ஊனமாக்கியது.

என் இளமை உதிர்ந்துவிட்டது.

 

காலம் இன்னும் வேர்களைக் குலுக்கி

விளையாடக் கூப்பிடுகிறது.

 

இத்தனைக் காயங்களுக்குப் பிறகும்

என் இருப்பு

என் திறமையாலா?

காலத்தின் கருணையாலா?

 

என் பற்களைப் பிடுங்கிச் செல்லலாம்

என் சொற்கள் சிரிக்கும்

 

என் கண்ணொளியை மறைக்கலாம்

என் சிந்தனை தொடரும்

 

என் இயத்தை நிறுத்தலாம்

என் எழுத்துத் துடிக்கும்

 

என் ஒரு காலை வாங்கலாம்

என் சுவடுகள் தொடரும்

 

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!

இவர்தான் இன்குலாப். நான் அறிந்த இன்குலாப். நீங்கள் அறிந்த இன்குலாப். நீங்களும் நானும் அறிந்த இன்குலாப்.

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற கருத்துக்களை நோக்கியன அவர் கேள்விகள். 

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு நூல் வெளியீட்டின் போது பேசினார். 'தலித் விடுதலையை தலித்துக்கள் மட்டுமே சாதிக்க இயலாது. தலித் விடுதலையை ஒரு அம்பேத்கர் பேசினால் மட்டும் போதாது. நாம் அனைவரும் அம்பேத்கராக மாறவேண்டும்'   இக் கோடுகாட்டுதலிலிருந்து வேறு சில குறிப்புக்களை எடுத்துக்கொள்ளலாம்.

இங்கு நான் வழமையாய் வழிமொழிகிற ஒரு முழக்கம் இதற்கு வலுவூட்டுவதாக அமையும்.

'தலித் இல்லாமல் விடுதலை இல்லை

தலித் விடுதலை தனியே இல்லை'

தாழ்த்தப்பட்டோர் விடுதலையை அவர்கள் மட்டுமே போராடிப் பெற இயலாது. முன்னெடுக்க ஒரு அம்பேத்கர் மட்டும் போதாது. நாம் எல்லோரும் அம்பேத்கராக மாறவேண்டும். தலித் விடுதலையை சாதிக்க ஒரு தொல்.திருமாவளவன் போராடினால் போதாது. நாம் எல்லோரும் திருமாவளவன்களாக மாறவேண்டும். தாழ்த்தப்பட்டோரின் விடுதலையை சாதிக்க ஒரு இன்குலாப் போதாது. நாம் எல்லோரும் இன்குலாப்புகளாக மாறவேண்டும். 

இன்குலாப் இச்சமுதாய இழிவை நோக்கி வைத்த கேள்விக்கு, இது ஒன்று தான் சரியான விடையின் தொடக்கப் புள்ளியாக அமையும்.

அவரின் சிந்திப்பும், முரண்படா சொல்லும் செயலும் எங்களுடன் வாழும். மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் திரும்பி வரும், எம்மை வளர்க்கும்.

அவர் கவிதையால் நினைக்கப்படுவார்.

எழுதிய எழுத்தால் நினைக்கப்படுவார்.                                                                                                                 எல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.

மின்னஞ்சல்: jpirakasam@gmail.com

கைபேசி: 94440 90186

2/24/2017 2:12:27 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்