Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் ? – அரசியல் அவதானிகள்

<p>மீண்டும் இந்தியாவை ஏமாற்றினாரா சம்பந்தன் ? – அரசியல் அவதானிகள்</p>

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை நிர்மானிக்கும் பணியை சிறிலங்கா அரசாங்கம் சீனாவிற்கு சொந்தமான பொறியியல் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளது. இது சரியான முடிவுதான் என்று சிறிலங்காவின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் சிறிலங்காவின் இந்த முடிவால் இந்தியா கவலையடைந்திருப்பதான செய்திகள் ஆங்கில ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமொன்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தன் பதிலளித்திருக்கிறார். ஆனால் குறித்த வீடமைப்பு திட்டம் தொடர்பில் ஏற்கனவே கூட்டமைப்பினருக்கு விளக்கமளிப்பட்டுள்ளது அத்துடன் பதுளையில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த வீட்டின் மாதிரி ஒன்றையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டிருக்கின்றனர். இந்த நிலையில் இது தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சம்பந்தன் கூறுவது அரசியல் அவதானிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருகோணமலை சம்பூரில் நிர்மானிக்கத் திட்டமிட்டிருந்த அனல் மின்நிலையம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் பின்னர் கைவிடப்பட்டது. இதன் போதும் குறித்த விடயத்தை இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அரசாங்கத்தின் கவனத்திற்கு சம்பந்தன் கொண்டு சென்றிருந்தார். குறித்த திட்டம் தொடர்பில் இந்தியாவிடம் ஒரு  மாதிரியும்,  அரசாங்கத்திடம் ஒரு மாதிரியும் பேசியிருந்தமை தொடர்பில் அப்போது விமர்சனங்கள் எழுந்தன.

இதன் காரணமாக இந்திய தூதரக மட்டத்தில் சம்பந்தன் தொடர்பில் அதிருப்திகள் நிலவின. இது தொடர்பில் அப்போதைய இந்தியத் தூதுவர் சின்ஹா, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். முன்னர் இடம்பெற்றது போன்றே தற்போதும் நிகழ்ந்திருக்கிறது. மாதிரி வீட்டை பார்வையிட்டு, அதற்கான ஒப்புதலையும் வழங்கிவிட்டு தற்போது இந்தியாவை சமாளிப்பதற்காக தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறாரா சம்பந்தன் என்னும் சந்தேகம் அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்திருக்கிறது

6/27/2018 6:53:50 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்