Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவாலாகவே உள்ளது! - டெல்லி மாநாட்டில் மன்மோகன் சிங் உரை!

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவாலாகவே உள்ளது! - டெல்லி மாநாட்டில் மன்மோகன் சிங் உரை!

 

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள்  ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆமை;பமாகியுள்ளது.

இம்மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் உள்ளதாக தனதுரையில் சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர், இது தொடர்பான நிலையான விழிப்பு தேவையென கூறியுள்ளார்.

அத்துடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்ட மன்கோகன் சிங், வடக்குக் கிழக்கு நிலைமைகள் தொடர்ந்தும் சிக்கல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏனைய உள்நாட்டு பாதுகாப்பு விடயங்களைப் போல், தீவிரவாதத்தை சமாளிப்பதற்கு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை தேவை எனவும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்
 
இம்மாநாட்டில் தமிழ் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்விவகாரம் குறித்து தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க வரும் அடுத்த மாதம் 05ஆம் திகதி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுததிருந்தமை தெரிந்ததே.

4/16/2012 4:11:42 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்