Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும்! - ரங்கிரி விஹாரையின் பிரதம தேரர் இனாமலுவே சுமங்கல தேரர் சூளுரை!!

தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும்! - ரங்கிரி விஹாரையின் பிரதம தேரர் இனாமலுவே சுமங்கல தேரர் சூளுரை!!

 

தம்புள்ளை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும், இதில் எவ்விதமான விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடமில்லை எனவும்  தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம தேரர் இனாமலுவே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறிலங்காவின் மைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், இப்பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது என்று கூறியதை பௌத்த மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இலங்கையில் பௌத்தம் 2300 வருட வரலாற்றைக் கொண்டது. ஆனால் முஸ்லிம் இன ஆண்கள்  வர்த்தக நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டு இலங்கை வந்த பின்னர், இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டனர்.

இதுவே முஸ்லிம்களின் உண்மையான வரலாறு. எனவே இவர்கள் இங்குவந்து தமது வரலாற்றை திரிபுபடுத்த முடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்படடுள்ளது. இதனை முஸ்லிம் இனத்தவர் குழப்பியடிக்க துயற்சிக்கின்றனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிக் கொண்டிருக்கின்றது ஆனால் பௌத்த அடிப்படைவாதம் எந்தவெரு நாட்டிலும் பரவவில்லை. இலங்கையில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்?

எனவே வர்த்தக நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் இந்நாட்டில்  பெரும்பான்மையாக காணப்படுகின்ற பௌத்த கலாசாரத்துக்கு மத்தியில் தம்முடைய வரலாற்றை நிலைநாட்ட நினைப்பது ஒரு கலாசாரக் கொள்ளை' என தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம தேரர் இனாமலுவே சுமங்கல தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால், அது தொடர்பில் இனிமேல் தான் பேசமாட்டேன் என சிறிலங்காவின் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸட கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5/6/2012 4:24:44 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்