Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

மாகாணசபைத் தேர்தல்: கிழக்கில் கட்சித்தாவல், பேரம் பேசுதல் வேகமெடுக்கிறது! கூட்டமைப்புடன் இணைய சிலர் முயற்சி!!

மாகாணசபைத் தேர்தல்: கிழக்கில் கட்சித்தாவல், பேரம் பேசுதல் வேகமெடுக்கிறது! கூட்டமைப்புடன் இணைய சிலர் முயற்சி!!

 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அறிகுறிகள் முழுமையாகத் தென்பட்டுள்ள நிலையில் கட்சித் தாவல்களும், பேரம் பேசுதல்களும் அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்களும், கிழக்கின் பிரபலமிக்க அரசியல் பிரமுகர்களும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்முறையாக கிழக்கு மாகாணத் தேர்தலில் குதிப்பதையடுத்து, கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடத் தற்போதுள்ள தமிழ் மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான இரா. துரைரெத்தினம் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அண்மையில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இது தொடர்பில் பேச்சு நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் நால்வர் தெரிவாகியிருந்தனர். ஆனால், இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் களத்தில் குதிப்பதனால் மூவரை மாத்திரம் களமிறக்கிப் போட்டியிட பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வியூகம் வகுத்துள்ளது.

இதனால் பிள்ளையான் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூட்டமைப்புடன் இணையத் தீர்மானித்து இது தொடர்பான பேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்முறையாக கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் முஸ்லிம் கட்சிகளுக்கும், கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ்க் கட்சிகளுக்கும் தேர்தல் தொடர்பான வியூகங்களை வகுப்பதில் முனைப்புக் காட்டி வருவதாக தெரிகிறது.

4/18/2012 1:19:24 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்