Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பள்ளிவாசல்கள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் ஏற்றுக் கொள்ளாது! - கருணாநிதி கண்டனம்!!

பள்ளிவாசல்கள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் ஏற்றுக் கொள்ளாது! - கருணாநிதி கண்டனம்!!

 

பள்ளிவாசல்கள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் ஏற்றுக் கொள்ளாது என தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்வத்தை இலங்கையில் பலர் கண்டித்துள்ளனர். இலங்கையில் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை நிறுவுவதில் சிறிலங்கா அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகின்றது.

இந்நோக்கத்தை நிறைவேற்ற தமிழ் மக்களின் தாயகப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம், இராணுவ மயப்படுத்தல் மற்றும் இந்து, கிறிஸ்துவ ஆலயங்களை நாசப்படுத்துதல் போன்ற இன மதங்களுக்கு எதிரான வன்முறைகள் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே தற்போது பள்ளிவாசல்களின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை.

பள்ளிவாசல்களாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் ஏற்றுக் கொள்ளாது. இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகவுகள் கடும் கண்டனத்திற்குரியவை' என கருணாநிதி வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

5/1/2012 2:24:42 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்