Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வடபகுதி கொள்ளைகளுடன் ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு? - விசாரணைகள் ஆரம்பம் என்கிறது பொலிஸ் தரப்பு!!

வடபகுதி கொள்ளைகளுடன் ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு? - விசாரணைகள் ஆரம்பம் என்கிறது பொலிஸ் தரப்பு!!

 

வடக்கில் துப்பாக்கி முனையில் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்களுடன் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், அது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இவ்விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி டி சில்வா தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறிலங்காவின் பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இ;டம்பெற்ற இச்சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி முனையில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகோணேசன் கருத்துத் தெரிவிக்கையில், 'விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மட்டும் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் என்று கூறமுடியாது.
 
இக்கொள்ளைச் சம்பவங்களில் முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம். அந்த அடிப்படையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இக்கொள்ளைச் சம்பவங்களின் போது ரி - 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக படைத்தரப்பினரைக் குற்றம் சுமத்த முடியாது.
 
இத்தகைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். அப்போது முழு உண்மையும் வெளிவரும்' எனக் கூறியுள்ளார்.

இச்சந்திப்பின்போது சிறிலங்காவின் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், 'வடபகுதியில் குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக பொலிஸ் தரப்பு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 80 சதவீதமான கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களைத் தற்போது இடம்பெறாது தடுத்திருக்கிறோம். போர் இடம்பெற்ற போது நடைமுறைப்படுத்த முடியாத சட்டங்களை தற்போது நாங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
 
கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை நியமித்து குற்றச் செயல்கள் இடம்பெறாமல் கட்டுப்படுத்தி வருகின்றோம். சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் முறைப்பாடு செய்யவும், விசாரணைகளை மேற்கொள்ளவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன' எனத் தெரிவித்துள்ளார்.
 
இச்சந்திப்பில் சிறிலங்காவின் யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா, வடபிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் விஜயரட்னா, பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் போவத்தை, யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சமன் சிகேரா ஆகியோரும்  கலந்து கொணடிருந்தனர்.

5/6/2012 4:00:31 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்