Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அதிகாரப் பகிர்வை மலையக பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும்! - இந்தியக் குழுவிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்!!

அதிகாரப் பகிர்வை மலையக பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும்! - இந்தியக் குழுவிடம் மனோ கணேசன் வலியுறுத்தல்!!

 

அதிகாரப் பகிர்வை வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், மலையக தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டிய கடப்பாடு இந்தியாவிற்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை நேற்று தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் வைத்து சந்தித்த போதே மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் இந்தியா கரிசனை கொள்ள  வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைபபு மற்றும் சிறிலங்கா அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை.

மலையக மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே அதிகாரப் பகிர்வு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் மலையக சமூகத்தினரின் தற்போதைய நிலைமையை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதாவது மலையக தமிழர்கள் வறுமையிலும், சுகாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கின்றனர். இவர்களுக்குத் தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளை உறுதிப்படுத்தியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு' என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் மனோ கணேசன் எடுத்துக் கூறியுள்ளார்.

4/17/2012 11:43:49 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்