Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

அமெரிக்க அழுத்தம்: ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த சிறிலங்கா தீர்மானம்!

அமெரிக்க அழுத்தம்: ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த சிறிலங்கா தீர்மானம்!

 

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்திருந்த கோரிக்கையை முன்னர் நிராகரித்திருந்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது தனது முடிவை மாற்றி ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தத் தீர்மானித்துள்ளது.

இதனால் எண.ணெய் இறக்குமதி தொடர்பில் ஈரானுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக குற்றம் சுமத்தி அந்நாட்டின் மீது எண்ணெய் ஏற்றுமதித் தடையை அமெரிக்கா விதித்திருந்தது. அத்துடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டிருந்தது.

அவ்வாறு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளாத பட்சத்தில், இந்நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு உட்பட்டு ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் முடிவடையவுள்ள நிலையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய மூன்று கப்பல் எண்ணெயை நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சபுகஸ்கந்தவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பயன்படுத்தப்படும் பெருமளவான எண்ணெய் ஈரானிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கம் இத்தீமானத்தை எடுத்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளை அடுத்தே இத்தகைய ஒரு முடிவை எடுக்க வேண்டி வந்துள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டு வந்த சிறிலங்கா மீதான  தீர்மானம் மற்றும் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டனை அடுத்த மாதம் 18ஆம் திகதி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்திக்கவுள்ளமையும் தெரிந்ததே.

4/26/2012 12:39:13 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்