Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பிரபாகரன் கூறியது  தான் உண்மை – ஞானசார தேரர்  

பிரபாகரன் கூறியது  தான் உண்மை – ஞானசார தேரர்
 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், இப்போது தான் எமக்குப் புரிந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ‘தந்திர நரி’ என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே.

பிரபாகரனுக்கு அப்போதே புரிந்த விடயம், தற்போது தான் எமக்கு புரிந்துள்ளது.

அரசியலில் இடம்பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிகத் தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார்.

நாட்டு மக்களுக்கு அரசியல்தீர்வு பெற்றுத் தருவதாக கூறி அவரே, இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்முறையை தோற்றுவிக்கின்றார்.

இனிவரும் காலங்களில் எந்த அரசியல் தரப்பினருக்கும் ஆதரவு வழங்க போவது கிடையாது. நாட்டு மக்கள் மகிந்தவையும் நம்ப வேண்டாம்  மைத்திரியையும் நம்ப வேண்டாம்.

சிறந்த அரசியல் தலைவரை  சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைந்து தெரிவு செய்ய வேண்டும்.

நாட்டின் அதிபரைத் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக  உள்ளன.

ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும், கடந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும்  நிறைவேற்றவில்லை.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இனிமேலும் தொடர வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிறைச்சாலையில் தனக்கு காற்சட்டையை அணிவிக்க முயற்சிக்கப்பட்ட போதும், தான் அதனை அணியவில்லை என்றும் ஞானசார தேரர் கூறினார்.

சிறையில் இருந்த ஐந்து நாட்களும் தான், காவி உடையை கழற்றி வைத்து விட்டு, சாரமும் சட்டையும் அணிந்திருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

6/27/2018 6:29:34 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்