Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால் அது குறித்து இனிமேல் பேசமாட்டேன்! - ரவூப் ஹக்கீம் அறிவிப்பு!!

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால் அது குறித்து இனிமேல் பேசமாட்டேன்! - ரவூப் ஹக்கீம் அறிவிப்பு!!

 

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால், அது தொடர்பில் இனிமேல் தான் பேசமாட்டேன் என சிறிலங்காவின் நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரம் தொடர்பில் மீண்டும் குப்பைகளைக் கிளறுவதும், வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்  கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது:

'18வது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கி இருக்காவிட்டால், அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளரைத் தெரிவு செய்வதில் சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் இன்று போர் வெடித்திருக்கும்.  இதை அரசாங்கத்தில் உள்ளவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே  போட்டியிட முடியும் என்ற சட்டத்தை 18வது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக மாற்றியதன் மூலம் இதனைச் செய்திருக்கிறோம்.

இலங்கையில் இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வந்த பின்னணியில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பெரும்பான்மைப் பலமுள்ளது.

இந்நிலையிலே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எட்டு ஆசனங்களும் 18வது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு வலிமை சேர்த்தது. இது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுத்தது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் சரணாகதி அரசியலை நடததுவதற்கு தயாராக இல்லை. இந்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தோடு நாங்கள் இணைந்து கொண்ட மறுதினமே கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுந்திருக்கிறோம் என நான் தெரிவித்தேன். இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்ற காரணத்தினாலே அன்று நான் இவ்வாறு குறிப்பிட்டேன்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தோடு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பது குறித்து மக்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தில் எமக்குள்ள அந்தஸ்த்து தொடர்பாக இன்றும் பெரிய பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன.

இந்த அரசாங்கத்தில் இருக்கிகின்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ எமது அந்தஸ்தை தீர்மானிப்பவர்கள் அல்ல என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தமிழ் தேசியம் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டும் போது தமிழ் ஊடகங்களால் நான் விமர்சிக்கப்படுகிறேன். ஒரு தேர்தல் பகிஷ்கரிப்பினால் விடுதலை புலிகள் தங்களை அழித்துக் கொண்டார்கள் என அவர்களின் மகா தவறைச் சுட்டிக்காட்டினேன். இதற்காக தமிழ் ஊடகவியலாளர்கள் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இது குறித்து நான் கவலை கொள்ளப் போவதில்லை' என அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், பைசால் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், அபூ உவைதா மௌஜூத் மற்றும் எம்.அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

5/6/2012 3:34:45 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்