Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை சரியான முடிவு! - மலேஷிய அரசாங்கம் கருத்து!!

ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை சரியான முடிவு! - மலேஷிய அரசாங்கம் கருத்து!!

 

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மலேஷியா கலந்து கொள்ளாமல் விட்டமை ஒரு கபட நோக்கம் கொண்டதல்ல எனவும், சிறிலங்காவை மூன்றே மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பது நியாயமானது அல்ல எனவும் மலேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. எனவே இதை குறுகிய காலத்தினுள் தீர்க்க முடியாது என மலேஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சாட் றயட் கூறியுள்ளார்.

இலங்கையில் இனங்களுக்கு இடையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு என்பது அதன் உள்நாட்டு விவகாரம் என்றே மலேஷியா கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினராலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 40,000க்கும் கூடுதலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு இலங்கையில் இனப்படுகொலை உண்மையிலேயே நடந்துள்ளது என மலேஷியா ஏற்றுக் கொண்டது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மனித உரிமை மீறல்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக இவ்வறிக்கை தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு இவற்றை உறுதி செய்துள்ளது. அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பினர் தற்பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா மீதான தீர்மானம் தொடர்பில் மலேஷியா வாக்களிக்காமல் விட்டமை கபடத்தனமானது அல்ல எனவும், மலேஷியா ஏனைய நாடுகளின் விவகாரத்தில் தலையிடுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சிறிலங்கா தன் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என மலேஷியா விரும்புகின்றது.

ஆனால் சிறிலங்காவின் நல்லிணக்க செயற்பாடுகள் மூலம் இலங்கையில் சமாதானத்தை அடையாதுவிடின், சர்வதேச சமுதாயம் தலையிடுவதா இல்லையா என தீர்மானிக்கும் என மலேஷியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சாட் றயட் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என்றே முன்னர் நம்பப்பட்டது. ஆனால் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வாக்களிக்காமல் மலேஷியா ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில் இத்தீர்மானம் தொடர்பில் மலேஷியா நடுநிலை வகித்தமை குறித்து நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3/29/2012 2:01:24 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்