Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

பெருஞ்சொற்கள்

<p>பெருஞ்சொற்கள்</p>
ரூபன் சிவராஜா

 

காலத்தின் தூரம்கடந்து

பெருஞ்சொற்களைக் காவித்திரிகிறது

வெளிகளே கதியென்றான பறவை

 

ஒவ்வொரு சொல்லும்

ஒவ்வொரு இறகென உதிரக்கூடும்

அன்றேல்

பறவையின் வாழ்வாகி அலையவும் கூடும்

வானளாவவும் கூடும்

 

தனித்தனியாய்

தொக்கிநிற்கும் சொற்களும்

கோர்வையாக்கி இழைத்த

பெருஞ்சொற்களில் சிலவும்

வர்ணங்கள் தீட்டப்படாதவை

மென்கோடுகளால்

எளிய மொழிநடையில் எழுதப்பட்டவை

 

எழுதப்படாமல் சுமக்கும் சொற்கள்

அரிதாரம் பூசாப்படாதவை

அகவெளி வியாபித்திருக்கின்றன

வானொளியாய்

 

கனவுகளின் உயிர்தரித்த சொற்கள்

கட்டுடைத்துப் பீறிட்டவை

உள்ளுருகி

நினைவுகளை வரையும் தூரிகையாய்

நிறங்களோடு கலந்திருக்கின்றன

நினைவுகளால் ஒளிரும்

சூரியனுமாய் படர்ந்திருக்கின்றன

சிறகுகள் அணிந்து

வானளந்தும் இருக்கின்றன

அலகுகளால் வெளியை

நுகர்ந்துமிருக்கின்றன

 

நினைவுகளின் துயர்பருகிய சொற்கள்

பாலைவனங்களில்

பசியோடிருந்திருக்கின்றன

வனாந்தரங்களில் திக்கறியாமல்

அலைக்களிந்துமிருக்கின்றன

 

மனப்பூட்டில் நசுங்கிய சொற்கள்

மவுனித்துமிருக்கின்றன

காட்சிகளும் படிமங்களும்

மனக்கூட்டின் அதியாழத்தில்

நித்தியமாகிக் கிடக்க

தொண்டைக்குழிக்குள்

குற்றுயிராகியுமிருக்கின்றன

 

காலத்தின் தூரம்கடந்து

பெருஞ்சொற்களைக் காவித்திரிகிறது

வெளிகளே கதியென்றான

இந்தப் பறவை

12/2/2017 2:06:24 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:



 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்