Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவை தயாரிக்க அரசு முயற்சி! - கயந்த கருணாதிலக

<p>புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவை தயாரிக்க அரசு முயற்சி! - கயந்த கருணாதிலக</p>

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, சர்வதேச தரத்திலான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள 'கொள்கை மற்றும் சட்டக் கட்டமைப்பு' குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழுவிடம் சிபாரிசுகள் கோரப்படவுள்ளன.

பரிந்துரைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய சட்டவரைவு தயாரிக்கப்படவுள்ளது.

இதற்காகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றுப் புதன்கிழமை  அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களிலிருந்து இலங்கையின் தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு, சுயாதீனம் ஆகியன பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், நாட்டு மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.

அத்துடன், வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் தமது செயற்பாடுகளுக்காக இலங்கையைப் பயன்படுத்தாமல் இருப்பதற்குரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். மேற்படி நடவடிக்கைகளை செய்வதற்கு முயற்சிக்கும் நபர்களை இனங்காணவேண்டும்.

அவர்களைக் கைது செய்தல், தடுத்து வைத்திருத்தல், விசாரணைகளை முன்னெடுத்தல், வழக்குத் தொடர்தல் மற்றும் தண்டனை வழங்குவதல் உட்பட முக்கிய பல விடயங்களை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 'கொள்கைகள் மற்றும் சட்டக் கட்டமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழுவின் சிபாரிசுகளைப் பெறுவதற்காக அதை அனுப்பிவைப்பதற்கும், அந்தச் சட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான சட்ட வரைபொன்றை தயாரிக்கும் பணியை ஆரம்பிப்பதற்குமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சரவை இணைப்பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

1/11/2017 1:11:20 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்