Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

இலங்கையில் நீதி கிடைப்பது என்பது எட்டாக்கனி! - சர்வதேச மன்னிப்புச் சபை கவலை!!

<p>இலங்கையில் நீதி கிடைப்பது என்பது எட்டாக்கனி! - சர்வதேச மன்னிப்புச் சபை கவலை!!</p>நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி 700 பக்கங்களுக்கு மேற்பட்ட தனது அறிக்கையை கடந்த 3ஆம் திகதி சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளித்தது. ஆனால் இந்நிகழ்வில் சிறிலங்காவின் ஜனாதிபதியோ, பிரதமரோ கலந்து கொண்டிருக்கவில்லை.

பொறுப்புக்கூறல் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாணைப் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்புடன் கூடிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

அதேவேளை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நிராகரிப்பானது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி, இழப்பீடு மற்றும் உண்மை ஆகியவை கிடைப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம்
மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையை விரைவில் கையளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அரசாங்கம், அதன் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மனிதவுரிமை மீறல்களால் பரிக்கப்பட்ட 7000க்கும் மேற்பட்ட மக்கள் நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் அமர்வுகளில் தமது கருத்துக்களை தைரீயமாக முன்வந்து பதிவு செய்திருந்தனர்.

இது தொடர்பான தங்களின் கடுமையான பணிகளை கலந்தாலோசனைச் செயலணியின் உறுப்பினர்கள் செய்து முடித்துவிட்ட போதிலும், குறித்த செயலணியின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது உறுதியை வெளிப்படுத்த வேண்டுமெனில், குறித்த செயலணியின் பரிந்துரைகள் குறித்து அது தீவிர கவனம் செலுத்த வேண்டும்' என சம்பா பட்டேல் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1/12/2017 2:47:18 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்