Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

வடக்கு மாகாண சபை திறனற்று செயற்படுவதாக அரசே புரளியைக் கிளப்புகிறது! – முதல்வர் விக்கி 

<p>வடக்கு மாகாண சபை திறனற்று செயற்படுவதாக அரசே புரளியைக் கிளப்புகிறது! – முதல்வர் விக்கி </p>

 

வடக்கு மாகாணசபை திறனற்றுச் செயற்படுகின்றது என்று கொழும்பு அரசுதான் புரளி கிளப்புகின்றது என்று வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவில் வைத்துத் தெரிவித்துள்ளார். 

கனடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அங்குள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

'வடக்கு மாகாண அமைச்சர்கள் மூவர் மீது நிதிக் கையாடல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களுள் ஒருவராகிய பொ.ஐங்கரநேசனிடம், நீங்கள் பதில் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துள்ளீர்கள். மக்களிடத்தில் இது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாதா? வடக்கு மாகாண சபை திறனற்று செயற்படுவதாக வடக்கு மக்கள் சொல்கின்றார்களே? இதுவரை மக்களுக்காக செய்துள்ள நடவடிக்கைகள் என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்,

நான் உள்பட மூன்று அமைச்சர்கள் இங்கு வந்துள்ளோம். அங்கு இருக்கின்ற இரண்டு அமைச்சர்களில் பொ.ஐங்கரநேசனே மூத்தவர். அதனடிப்படையில் அவரிடம் பொறுப்பைக் கையளித்தேன்.

அவர் மீது குற்றச்சாட்டு இருக்கின்றது என்பதற்காக அவர் குற்றவாளி அல்லர். ஊடகங்கள் எங்கள் மீது பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றன. அதற்காக நாங்கள் எல்லோரும் குற்றவாளிகளா? குற்றம் சுமத்தப்படுகின்றது. குற்றம் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. ஐங்கரநேசன் குற்றம் செய்யவில்லை என்றோ, குற்றம் செய்தார் என்றோ நான் சொல்லவில்லை. குற்றம் நிரூபிக்கப்படவில்லை.

நாங்கள் வடக்கில் என்ன வேலை செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டுங்கள். அதன் பின்னர் நாங்கள் என்ன செய்யவில்லை என்பதைச் சொல்லுங்கள்.

வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்று கொழும்பு அரசுதான் புரளி கிளப்புகின்றது. அது அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஊடகவியலாளர்களும் அந்தச் சதிக்குள் பலியாகிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன். வடக்கு மாகாண சபை  திறனாகச் செயற்படுகின்றது என்றால், அதற்கு மேலதிக அதிகாரங்கள் வழங்க வேண்டி வரும். அதனால் அரசு, வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுவதாகச் சொல்லி வருகின்றது'.

இவ்வாறு வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

1/10/2017 1:10:25 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்