Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களமும் மேன்முறையீடு!

<p>ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களமும் மேன்முறையீடு!</p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீடு செய்துள்ளது.

ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் அறங்காவல் சபையின் முடிவை ஏற்று கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையிலேயே ரவிராஜின் படுகொலை வழக்கை மீள்விசாரணை செய்யுமாறு கோரி சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களமும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல எதிரிகளும் குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணைக்கு சிங்கள மொழி பேசும் விசேட அறங்காவல் சபை ஒன்று கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு துறையினரும், கருணா குழு உறுப்பினர்களும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி படைத்தரப்பால் கருணா குழுவுக்கு வழங்கப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டிருந்தது.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய மாதா வீதியிலிருந்து எல்பிட்டிகல மாவத்தைக்குச் செல்லும் வழியில் ரவிராஜூம், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான லக்ஷ்மன் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலும், குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையினர் அனைவரும் விடுவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1/11/2017 6:47:47 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்