Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்: நிலாந்தனின் நூல் வெளியீடு!

<p>புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்: நிலாந்தனின் நூல் வெளியீடு!</p>ஆய்வாளரும், விமர்சகரும், கவிஞருமான நிலாந்தனின் புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் எனும் நூல் வெளிவந்துள்ளது.

இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில், திசை பத்திரிகையில் நிலாந்தன் அரசியல் பத்திகளை எழுதத் தொடங்கினார்.

அதிலிருந்து 27 ஆண்டுகளாக எழுதி வரும் அவர் ஈழநாதம், வீரகேசரி, தினக்குரல் மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதியுள்ளார்.

அத்துடன், கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வார பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வரும் அவருடைய கட்டுரைகள், பின்னர் பொங்குதமிழ், குளோபல் தமிழ், மாற்றம் - Jds Lanka (Journalist for Democracy in SriLanka) போன்ற பல இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.

காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில் சிறிலங்கா அரசாங்கத்தின் போர் வெற்றிக்குப் பின்பான தமிழ் மக்களின் நிலை, வெற்றிவாதத்தின் எதேச்சாதிகாரம், தமிழ்ச் சிந்தனைப் பரப்பில் உள்ள போதாமை, தமிழ் சிவில் சமூகத்தின் ஜனநாயக வெளி, இந்திய வெளிவிவகாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச பொறிமுறைக்குள் சிக்கிய தமிழர்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய சுமார் 40க்கும் மேற்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மீளப் பெறமுடியாத ஒரு பின்னணியில் போருக்குப் பின் அதாவது தமிழில் தோன்றிய இரண்டாவது வீரயுகம் ஒன்றின் வீழ்ச்சிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள் மற்றும் கட்டுரைகளின் முதலாவது தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1/11/2017 2:48:46 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்