Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தெற்கு அபிவிருத்தி வலய ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! - அரசு உறுதி

தெற்கு அபிவிருத்தி வலய ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்! - அரசு உறுதி

 

தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலயம், அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட சகல உடன்படிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அவை தொடர்பில் விவாதம் நடத்தப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர், நாடாளுமன்ற நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழ் விசேட கூற்றொன்றை விடுத்து அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்தும், தெற்கு கைத்தொழில் அபிவிருத்தி வலய ஆரம்ப நிகழ்வின்போது ஏற்பட்ட பதற்ற நிலைமை குறித்தும் பொது எதிரணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன பிரதமரிடம் கேள்விகளை எழுப்பினார்.

இதையடுத்து இவ்விவகாரம் சபையில் சூடுபிடித்தது. சுமார் ஒருமணிநேரம் வரை ஆளும், எதிரணி உறுப்பினர்களுக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க,

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை அரசுக்கும், சீன துறைமுக நிறுவனத்துக்குமிடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

சீன நிறுவனத்துக்கு 65 சதவீதமும், இலங்கைக்கு 35 சதவீதமும் உரிமை உரித்தாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. ஆகவே, நாளையும் (இன்றும்) நாளை மறுதினமும் (நாளை) இது பற்றி சபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்' என்றார்.

இதற்குப் பதிலளித்த சபைமுதல்வர்,

'சகல உடன்படிக்கைகளும் நிபந்தனை அடிப்படையிலானவை. ஆகவே, அவை சபையில் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் விவாதம் நடத்தலாம்' எனப் பதிலளித்தார்.

1/10/2017 2:40:57 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்