Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!

<p>சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு!</p>சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிபந்தனைகளுடன் மீண்டும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகள் காரணமாக சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் 2010ஆம் ஆண்டு இரத்துச் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதனடிப்படையில் சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை கடுமையான நிபந்தனைகளுடன் மீண்டும் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கு மனிதவுரிமைகள், தொழிலாளர் பிரகடனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 27 விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிபந்தனைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்  வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், சிறிலங்காவுக்கு இந்த வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டாலும், நிலையான அபிவிருத்தி, மனிதவுரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைக்கப் பெற்றுள்ளமையானது சிறிலங்காவுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

1/12/2017 3:12:34 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்