Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும்! - மனிதவுரிமை கண்காணிப்பகம்

<p>செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும்! - மனிதவுரிமை கண்காணிப்பகம்</p>பொறுப்புக்கூறல் தொடர்பான நீதி வழங்கும் பொறிமுறை கலப்பு நீதிமன்றத்தை கொண்டதாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையை மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இந்த நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கருத்தறியும் செயலணியின் அறிக்கை கடந்த 3ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால், இந்த நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில், நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையை வரவேற்றுள்ள மனிதவுரிமைகள் கண்காணிப்பகம், குறித்த செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைமை தொடர்பிலான அனைத்து சமூகங்களின் பிரதிபலிப்புக்களை குறித்த கலந்தாலோசனைச் செயலணி வெளிப்படுத்தியுள்ளதாக மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உண்மை மற்றும் நீதி குறித்த இலங்கைக் குடிமக்களின் அபிலாசைகள் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் தொடர்பான விசாரணைகள் கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்ற கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரை மிகவும் முக்கியமானது.

காணிப் பிரச்சினைகள், காணாமல் போதல் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான கலந்தாலோசனைச் செயலணி பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இந்த கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்தரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒர் பொறிமுறைமையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வாழ் மக்களது கருத்துக்களை கேட்டறிந்து கலந்தாலோசனைச் செயலணியால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு மட்டுமன்றி இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் நல்லிணக்கம் மற்றும் நீதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றார்கள் என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்' என்று இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்தாலோசனை செயலணியின் பரிந்துரைகளை ஐ.நா மனிதவுரிமைகள் ஆணயாளரும் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1/11/2017 5:07:19 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்