Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயக விரோதமானது! - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கவலை

<p>தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயக விரோதமானது! - தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கவலை</p>

 

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற ஆசை இருப்பினும், அதனைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலைப் பிற்படுவது தொடர்பில் எமது ஆணையகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், தேர்தல் குறித்து நாடாளுமன்றத்துக்கே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடளுமன்றத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சரினால்தான் தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியும்.

சுயாதீன ஆணைக்குழு என்பதால் மட்டும் எமக்கு இந்த அதிகாரங்கள் கிடைத்துவிடாது. இலங்கை மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் இவ்வாறே இடம்பெறுகின்றன.

அரசியல் கட்சிகள் போல எமக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. இருப்பினும், அதனைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எமக்கு வழங்கப்படவில்லை.

எனினும், தேர்தலைத் தொடர்ந்தும் பிற்போட்டுக்கொண்டு வருவதானது ஜனநாயகத்துக்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமான செயலாகும்.

இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பரிய தெரிவித்தார். 

1/10/2017 2:48:42 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்