Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் அரசு உறுதி! - ராஜித சேனாரத்ன

<p>நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் அரசு உறுதி! - ராஜித சேனாரத்ன</p>

 

'நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். தான் அதை செய்து முடிப்பார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சோபித தேரரின் சடலத்தின் முன்னால் சபதம் செய்துள்ளார். ஆகவே, அதை அரசு நிச்சயம் செய்து முடிக்கும். 2020 இல் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறாது.'

இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கேள்வி - பதில் நேரம் ஆரம்பமானது. இதன்போது, 'நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?' என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'அந்தத் தீர்மானம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதால் அதை அரசு செய்யும். ஜனாதிபதியும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்;. சோபித தேரரின் இறுதிக்கிரியையின்போது இரங்கல் உரையாற்றி ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அத்தகையதொரு முடிவை எடுத்திருந்தாலும் அதற்கு ஜனாதிபதி இன்னும் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. ஜனவரி 8ஆம் திகதி எதற்காக மாற்றம் ஏற்பட்டது என்ற விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.

அதேவேளை, 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்று அவரின் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு,

'2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. தேர்தலே இல்லாதபோது வேட்பாளர் பற்றிப் பேசுவது பயனில்லை அல்லவா?' என்றார் ராஜித.

'நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது' என்று குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

1/11/2017 1:12:32 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்