Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து கூட்டமைப்பு மேன்முறையீடு!

<p>ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து கூட்டமைப்பு மேன்முறையீடு!</p>

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மேன்முறையீடு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நடராஜா ரவிராஜ், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை சிங்களம் பேசும் விசேட ஜுரிகள் சபைக்கு முன்பாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 5 பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த மாதம் 24ஆம் திகதி விடுதலை செய்தது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரிகளின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் பிரதி அமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோர் மீதும் பாரதூரமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று மேன்முறையீடு செய்துள்ளது.

இதேவேளை, மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்குத் திருப்தி ஏற்படவில்லை என்பதை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்னவும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

1/10/2017 1:19:17 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்