Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கைதான விமல் வீரவன்சவுக்கு 24ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

<p>கைதான விமல் வீரவன்சவுக்கு 24ஆம் திகதி வரை விளக்கமறியல்!!</p>

 

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (எவ்.சி.ஐ.டி.) நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட விமல் கொழும்பு கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மஹிந்த ஆட்சியின்போது வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை அமைச்சுப் பதவி விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த காலப்பகுதிக்குள் அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தினார் என முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்காகவே எவ்.சி.ஐ.டிக்கு அவர் நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

விமல் வீரவன்ச விரைவில் செய்யப்படவுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரூடம் கூறியிருந்த நிலையில், விமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டது மஹிந்த அணியான பொது எதிரணி உறுப்பினர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், விமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மஹிந்த அணி உறுப்பினர்களும், விமலின் ஆதரவாளர்களும் நேற்றுக் காலை முதல் எவ்.சி.ஐ.டி. வளாகத்தில் திரண்டிருந்தனர்.

காலை 9.40 மணியளவில் தனது மனைவி, பிள்ளை சகிதம் காரில் வந்திறங்கினார் விமல். பௌத்த மத வழிபாட்டுடன் பிரித்நூல் கட்டப்பட்ட பின்னர் அவர் விசாரணைக்கு அனுப்பட்டிருந்தார்.

விசாரணை அறைக்குள் அவர் செல்லும்போது, 'எங்கள் தலைவர் வாழ்க! எங்கள் தலைவர் வாழ்க!!' என விமலின் விசுவாசிகள் கோஷம் எழுப்பினர். இந்நிலையிலேயே, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை எதிர்வரும் 24ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆட்சி மாற்றத்தின்பின்னர் 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி, மஹிந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதிமோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக எவ்.சி.ஐ.டி. நிறுவப்பட்டது. இதற்கு ஆரம்பம் முதலே மஹிந்த அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். எவ்.சி.ஐ.டியின் செயற்பாட்டை ஜனாதிபதிகூட விமர்சித்துள்ளார்.

எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எவ்.சி.ஐ.டி. இயங்கி வருகின்றது. மஹிந்த ஆட்சியிலிருந்து முக்கிய அமைச்சர்கள் பலரை அந்த விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1/10/2017 1:31:49 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்