Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா கட்சிகளுடன் இந்தியக் குழு சந்திப்பு! - இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!!

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா கட்சிகளுடன் இந்தியக் குழு சந்திப்பு! - இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!!

 

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சிறிலங்கா ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இளைஞர் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இலங்கைக்கு நாளை விஜயம் செய்யவுள்ள இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பயணத்திட்ட நிகழ்ச்சி நிரலை இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி நிரலில் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் நாளை இலங்கை செல்லும் இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும்  21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி நிரலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 17, 2012

1. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் சந்திப்பு.

2. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூடன் சந்திப்பு. 

3. சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கு விஜயம்.  அங்கு சபாநாயகர் சாமல் ராஜபக்ச மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு. அதனைத் தொடர்ந்து அங்கேயே மதிய விருந்து.

4. முறையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இளைஞர் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சந்திப்பு.

5. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் இரவு விருந்துபசாரம்.

ஏப்ரல் 18, 2012

1. மதவாச்சிக்குச் சென்று வடபகுதிக்கான தொடருந்துப் பாதை புனரமைப்பை பார்வையிடல்.

2. முல்லைத்தீவு விஜயம். மருத்துவமனைக்கான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு, வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கல், புனரமைக்கப்பட்ட பாடசாலைகளை திறந்த வைத்தல், உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குதல் மற்றும் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடல்.

3. வன்னி நிலைமைகள் குறித்து சிறிலங்கா படைத்தரப்பினருடன் கலந்துரையாடல்.

4. யாழ்ப்பாணம் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.

5. சிறிலங்காவுக்கான இந்திய உதவித் தூதுவருடன் இரவு விருந்து.

ஏப்ரல் 19, 2012

1. வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு.

2. மாகாண அதிகாரிகளுடன் சந்திப்பு.

3. காங்கேசன்துறை துறைமுக விஜயம்.

4. களுத்துறையில் தென்மாகாண தொடரூந்துத்  திட்டத்தின் புனர்நிர்மாண வேலைகள் கையளிக்கப்படல்.

5. தென்மாகாண ஆளுனருடன் தேநீர் விருந்து.

6. கொழும்பு திரும்பி சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இரவு விருந்து. 

ஏப்ரல் 20, 2012

1. மட்டக்களப்பு விஜயம். அங்கு தொழிற் பயிற்சி கல்லூரி கையளிக்கப்படல்.

2. சீவா திட்டத்திற்கான விஜயம்

3. உள்ளூர் மக்களுடனும், கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு.

4. மத்திய மாகாணம் டிக்கோயாவுக்கு விஜயம். அங்கு வைத்தியசாலைத் திட்டத்திற்கான விஜயத்துடன், ஹற்றன் டிக்கோயா மக்களுடன் கலந்துரையாடல்.

ஏப்ரல் 21, 2012

1. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் காலை விருந்துடன் கூடிய சந்திப்பு.

2. ஊடகவியலாளருடன் சந்திப்பு.

3. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புறப்படல் என இந்த நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4/15/2012 2:28:52 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்