Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

ஜாலிய விக்கிரமசூரியவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

<p>ஜாலிய விக்கிரமசூரியவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!</p>அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான இவர் அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில் தூதுவர் காரியாலயம் ஒன்றை கொள்வனவு செய்த போது 3 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர்களை முறையற்ற வகையில் கையாண்டதாக ஜாலிய விக்கிரமசூரிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவர் வெளிநாட்டில் இருந்து கடந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் திகதி நாடு திரும்பிய போது, விமான நிலையத்தில் வைத்து சிறிலங்காவின் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவரை மீண்டும் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போது, ஜாலிய விக்கிரமசூரியவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

1/11/2017 1:55:09 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்