Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

எல்லை நிர்ணய அறிக்கை கிடைத்தவுடன் தேர்தலுக்கான அறிவிப்பு! - அமைச்சர் முஸ்தபா

எல்லை நிர்ணய அறிக்கை கிடைத்தவுடன் தேர்தலுக்கான அறிவிப்பு! - அமைச்சர் முஸ்தபா

 

'எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது. குறித்த அறிக்கை கிடைத்ததும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவேன்.'

இவ்வாறு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

'எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் நான்தான் அறிக்கை வெளிவருவதில் தாமதத்தை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் என்னை சிறந்தவர் என்று அவர் புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் நான் கெட்டவனாகிவிட்டேன்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவை பூரண ஜனநாயகத்துடன் செயற்பட அனுமதியளித்திருந்தேன். நான் அவர்களின் செயற்பாட்டில் ஒருபோதும் தலையிடவில்லை என்பதுடன், அவர்களின் கோரிக்கைக்கு அமைய காலத்தையும் நீடித்துக்கொடுத்தேன்.

குறித்த அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டபோது அதில் இருவர் கையொப்பமிட்டிருக்கவில்லை. நான் ஜனாதிபதியின் சட்டத்தரணி என்ற வகையில் சட்டமா அதிபருக்குப் பொறுப்புக் கூறுபவனாகவும் உள்ளேன். எனவே, அந்த அறிக்கையில் இருவர் கையொப்பமிடாமல் அதனைப் பொறுப்பேற்க முடியாது. அது ஜனநாயகமும், நல்லாட்சியும் அல்ல.

எதிர்வரும் 17ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் கையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அன்றைய தினம் அறிக்கை கிடைத்தவுடன் மாலையே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தேர்தலைப் பிற்போட வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை. எமக்கு சிறந்த தலைவர் ஒருவர் இருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தலிலேயே எமது தலைவர் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறான சிறிய தேர்தல்கள் எமக்கு ஒரு பொருட்டல்ல'

இவ்வாறு அமைச்சர் முஸ்தபா தெரிவித்தார்.

1/11/2017 1:08:07 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்