Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

செயலணியின் அறிக்கை சர்வதேச அழுத்தத்தை மேலும் வலுப்படுத்தும்! - பீரிஸ் அதிருப்தி!!

<p>செயலணியின் அறிக்கை சர்வதேச அழுத்தத்தை மேலும் வலுப்படுத்தும்! - பீரிஸ் அதிருப்தி!!</p>

 

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்று அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க செயலணி கூறியிருப்பதால் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றமே போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் அழுத்தம் வலுபெற்றுள்ளது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா கேந்திரண நிலையத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

அரசால் அமைக்கப்பட்ட செயலணியொன்று போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்று கூறுகின்றது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை எதிர்த்துள்ளார். அவர் அதனை எதிர்த்தாலும் இந்தச் செயலணியின் உத்தியோகபூர்வமான அறிக்கையில் சர்வதேச நீதிபதிகள் அவசியம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையை மேலும் இக்கட்டான நிலைக்கு இந்தச் செயலணியின் அறிக்கை தள்ளியுள்ளது. இதனூடாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றமே போர்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் வலுபெற்றுள்ளது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

1/11/2017 1:09:29 PM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்