Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

குணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்!

<p>குணா கவியழகனின் கர்ப்பநிலம் - வாழ்வியலைப் பேசுகின்ற போர் இலக்கியம்!</p>

நாவலை வாசித்து முடித்தபின்னும் இன்னமும் எனது காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை வயோதிபர்களின் 'பிள்ளை, பாலம் வந்திட்டுதே!' என்பதுதான். கதாபாத்திரங்கள் பாலத்தை கடந்துவிட்டிருந்தாலும் கர்ப்பநிலத்தை படித்துமுடித்த பின் பாலத்திற்கு இன்னும் நாம் யாரும் வந்து சேரவில்லையே என்ற உணர்வே எஞ்சி நிற்கிறது. 

... »மேலும்

 

முந்தய பதிவுகள்

கர்ப்பநிலம் சொந்த மண்ணில் அகதியாக்கப்பட்ட எமது சமூகத்தின் கதை. குணா கவியழகன் தனது காட்டையும் தனது நிலத்தையும் எழுதும் எழுத்தாளர். இந்த நாவலுக்குக்கூட கர்ப்பநிலம் என்று பெயர் வைத்தாலும், காடு விட்டுப்போய்விடக் கூடாதென்று வனமேகுகாதை ...
 

இந்த மாதம் 4ஆம் திகதி (04.03.18) ஒஸ்லோவில் ஒரு புத்தக அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 80 - 100 ஆண்டுகளுக்க முற்பட்ட எழுத்துகளின் மீள்பதிப்புப் புத்தகம் அது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை (1855- ...
 

முள்வேலி

- 2/2/2018 2:31:59 PM

பார்வை தொடும் தூரத்தில்

பரந்திருக்கிறது காணி!

பாதையோர தறப்பாளில்

பனியில் குளித்தபடி நாங்கள்

மாமரத்து நிழலில்

பூப்பந்து விளையாடியபடி அவர்கள்

இடையே

ஆக்கிரமிப்பின் அடையாளமாய்

முட்கம்பிவேலி நீண்டுகிடக்கிறது.

'இது இராணுவப் பகுதி

உள் நுழையத் தடை’ !

யாரை.... யார்....

தடுப்பது?

எது அபகரிப்பு?

எது அத்துமீறல்?

நான்

புரண்டு புழுதியளைந்து

அகரம் வரைந்த முற்றத்துமண்;

சீருடையோடு சின்னவனை புதைத்த

செம்பாட்டுப் ...
 

காலத்தின் தூரம்கடந்து

பெருஞ்சொற்களைக் காவித்திரிகிறது

வெளிகளே கதியென்றான பறவை

ஒவ்வொரு சொல்லும்

ஒவ்வொரு இறகென உதிரக்கூடும்

அன்றேல்

பறவையின் வாழ்வாகி அலையவும் கூடும்

வானளாவவும் கூடும்

தனித்தனியாய்

தொக்கிநிற்கும் சொற்களும்

கோர்வையாக்கி இழைத்த

பெருஞ்சொற்களில் சிலவும்

வர்ணங்கள் தீட்டப்படாதவை

மென்கோடுகளால்

எளிய மொழிநடையில் எழுதப்பட்டவை

எழுதப்படாமல் சுமக்கும் சொற்கள்

அரிதாரம் பூசாப்படாதவை

அகவெளி வியாபித்திருக்கின்றன

வானொளியாய்

கனவுகளின் உயிர்தரித்த சொற்கள்

கட்டுடைத்துப் பீறிட்டவை

உள்ளுருகி

நினைவுகளை ...
 

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் ஈழத்து இலக்கிய வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். நாவல், சிறுகதை, விமர்சனக் கட்டுரைகள் என பன்முக ஆற்றல்களைக் கொண்டவர். பத்திரிகைத்துறையில் முதிர்ச்சி பெற்றவர். இளம் படைப்பாளிகள் பலர் பற்றிப்படர்ந்து உயரத் தோன்றாத்துணையாக இருந்தவர். ...
 

அசுரர்களின் உலகம் வினோதமானது.

இங்கு தலைவனைத் தவிர்ந்து

அனைவரும் சிறையினுள் தான்

வாழ்வு என்றாகி விடுகிறது.

தேவர்களின் மூச்சுக்காற்றையும் சிறைப்படுத்த

அசுரர்களும் சிறைகூடங்களினுள் 

குடியமர்ந்து கொள்கின்றனர்.

.

அதிகார சுவை என்பது

சிறைவாசம் ஆனாலும்

அனுபவிக்கவே ஆசைகொள்கிறது.

சிறையின் அதிகாரமானது

சிம்மாசனத்தின் அதிகாரத்திலும்

தித்திப்பானதாகி விடுகிறது.

`அரசின் அதிகாரம் எப்போதும்

சிறைகளில் தான் பாதுகாப்பாக இருக்கிறது ...
 

'கற்பூர நாயகியே

கனகவல்லி...'

ஆங்காங்கே சுருதி பிசகினாலும்

இசையும் எச்சிலும்

நாதஸ்வர

வாய்வழியே வழிகிறது.

உற்சாகபானம் உள்ளிறங்கினாலும்

தாளம் தவறவில்லை தவில்

மஞ்சள் பூசி

மாலை போர்த்தி

ஆயிரம் கண்ணுடையாள்

அகிலாண்ட நாயகி

அருள்பாலிக்க

ஆரோகணித்திருக்கிறாள்!

கர்ப்பூரம் விற்கும் சிறார்கள்

கடலைக்கார கிழவிகள்

விழியெறியும் விடலையர்

பாதணி பாதுகாவலர்கள்

குளிர்களி வியாபாரிகள்.....

அவரவர்க்கு அவரவர் வேலை

ஆனாலும்....

கொஞ்சமும் நகரவில்லை மஞ்சம்

'இலுப்பைக்காட்டு பேச்சி

இம்மியும் நகராள்' ...
 

விசேட நாட்களில் கொளுத்திய

பட்டாசு பயத்துக்கு

ஊரைவிட்டு ஓடிப்போன காக்காக்கள்

விரத சோற்றை புறம்தள்ளி

விருந்துச் சோற்றை சுவைக்க

வந்து போவது போல

போர்வற்றிய நாள் தொடங்கி

கோடையில் உல்லாசப் பயணம்

வந்து போகும் வேற்றுக்கிரக வாசிகள்.

ஆனாலும் கிரகவாசிகள்

பார்களில் வழங்கும் `காக்டெய்ல்´போல்

ஆயிரம் மொழி கலந்து

தமிழும் பேசுகிறார்கள்.

அதிரும் ...
 

ஹென்றிக் இப்சனின் 'பேர் கிந்த் – Peer Gynt' நாடகத்தினைத் திறந்தவெளி அரங்கமாகக் காண்கின்ற அருமையான வாய்ப்பு 06-08-17 கிட்டியது.

கோலோவத்ன (Gålåvatnet) எனும் பேராற்றினுடைய கரையே அந்நாடக அரங்கமாக இருந்தது. நோர்வேயின் கிழக்குப் பிராந்தியத்தில் ...
 

'முகில்களின் மீது நெருப்பு' - அவரது ஓவிய நூல். அது ஒரு குறியீடு. நெருப்பை ஏந்தி முகிற்பஞ்சு போன்ற தூரிகை வெளிப்படும் என்பதின் குறியீடு. நெருப்பற்ற எந்த சிறு ஓவியத்தையும் சந்தானத்தின் தூரிகைமுனை பிறப்பித்ததில்லை.

முகில்களின் ...
 

வருடங்கள் தொலைந்த போதும்

நாட்கள் நகரவில்லை.

ஊண் இன்றி உயிர் ஊன்றி

இரத்தம் உறையும் சத்தம் கேட்டு

ஊரும் உறையும்.

உதிர்த்தவனின் ஊமை சத்தம்

உறக்கத்தை கெடுக்கும்.

மாயம் தழுவிய கணவனும்

சோகம் தின்ற புத்திரருமாக

செழித்த மண்ணில் வறள்கிறது வாழ்வு.

விதியின் வீரியத்தை

வீதியில் விழுத்தி

விலகிப் போகிறது வியாக்கியானம். 

கள்வனைத் ...
 

இன்றோடு

எழுபத்தோராவது

நாளாக இருக்கலாம்.

காணாமல் ஆக்கப்பட்ட

உதிரத்து உறவுகளுக்காய்

உத்தரித்துக் கிடக்கிறோம்

வீதி மருங்கில்

குவிக்கப்பட்ட

கற்களுக்கு நிகராக...

காட்சிப் பொருளானோம்

நின்று பார்க்கிறார்கள் சிலர்

நிழற்படம் எடுக்கிறார்கள் சிலர்

நேரமின்றி ஓடுகிறார்கள் சிலர்

ஒலி வாங்கிகளும்

ஒளிப்பதிவு கருவிகளும்

களைத்துப் போயிருக்கலாம்

அல்லது வேறு...

தித்திப்பான தீனி கிடைத்திருக்கலாம்

நாவிரண்டு ஆண்டுகள் முன்னாய்

விடுதலையின் வேர் அறுந்த

நாட்களில்

காற்றில் குருதிவெடில் ...
 

பேரினவாதிகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், அவர்களின் சகல சொத்துரிமைகளுக்கும் எதிரானவர்கள். இனரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, துவேசத்தை விதைத்து அவற்றை விளைவித்து.. வெட்டியள்ளி அனுபவிப்பவர்கள். இதற்கு எமது நாட்டுப் பௌத்த சிங்கள அரசுகள் சிறந்த உதாரணங்களாகப் ...
 

காற்றை கிழித்து

கிழிந்த சட்டை போட்ட 

நெளிந்த சைக்கிள்

சிறுவனின் கடிவாளத்தில் கிடுகிடுக்கிறது.

சைக்கிள் பாருக்குள்ளால்

அந்தப்பக்கம் இந்தப்பக்கமுமாக

மூச்சிரைக்கும் தலையும் உடலும்.

வறண்ட வாய்க்கால் மதகில்

படுத்தபடி

உச்சி வெய்யிலுக்கு புகை போடும்

உயர் தர மாணவனைக் கண்டு

வெறுங்காலை டயரில் தேய்த்து

எட்ட நின்று நிதானித்த சைக்கிள்

உருண்டு வந்து ...
 

'சுய பிரதிமைகள்' எனுந் தலைப்பிலான காண்பியக் கலைக்காட்சியொன்று 26.01.2017 அன்று கொழும்பிலுள்ள சாஷ்க்கியா பெனான்டோ கலையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்திரமும் வடிவமைப்பும் துறையிற் பயின்று வெளியேறிய மூன்று பட்டதாரிகளின் கலைப்படைப்புக்கள் ...
 

<< Prev Next >>
 
ஒலிப்பதிவுகள்
  • செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

செயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை! - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)

  • ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

ஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே! - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)

  • மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

மாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்

  • முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா

  • புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

புலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)

»மேலும்

நிழல்
ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள்? - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்